தமிழக அரசு தரும் 2000 உதவித்தொகை.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. திருச்சி கலெக்டர் விளக்கம்
திருச்சி: மாற்றுத்திறனாளிகள் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் அறிவித்துள்ளார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் யாரெல்லாம் இந்த 2000 ரூபாய் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்பது குறித்தும் திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் விளக்கமாக தெரிவித்துள்ளார். அதனை பற்றி பார்ப்போம்..
தமிழக அரசு மாற்றத்திறனாளிகள் நலனில் தனி கவனம் செலுத்தி வருகிறது. அவர்களுக்கு பல்வேறு வசதிகளை அளிப்பதுடன், உதவி தொகையும் தருகிறது. இவர்களுக்காக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த துறை சார்பில் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ/மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. 1 முதல் 5 வகுப்பு வரை ரூ.1000/-, 6 முதல் 8 வகுப்பு வரை ரூ.3000/-, 9 முதல் 12 வகுப்பு வரை ரூ.4000/-, இளங்கலை பட்டம் ரூ.6000/-, முதுகலை பட்டம் ரூ.7000/ ஆகி உதவி தொகை வழங்கப்படுகிறது.

இதேபோல் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவ/மாணவியர்களுக்கு கீழ்கண்டவாறு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. 9 முதல் 12 வகுப்பு வரை ரூ.3000/-
இளங்கலை பட்டம் ரூ.5000/-, முதுகலை பட்டம் ரூ.6000/- உதவி தொகை வழங்கப்படுகிறது.
இதேபோல் பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது, 40% மேல் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி நபர்களுக்கு பராமரிப்பு உதவித்தொகையாக மாதம் ரூ.1500/- பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு ECS முறையில் அனுப்பப்படுகிறது. 75% மேல் கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி நபர்களுக்கு பராமரிப்பு உதவித்தொகையாக மாதம் ரூ.1500/- பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு ECS முறையில் அனுப்பப்படுகிறது. மேலும் 40% மேல் தசைசிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி நபர்களுக்கு பராமரிப்பு உதவித்தொகையாக மாதம் ரூ.1500/- பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு ECS முறையில் அனுப்பப்படுகிறது. 40% மேல் தொழு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி நபர்களுக்கு பராமரிப்பு உதவித்தொகையாக மாதம் ரூ.1500/- பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு ECS முறையில் அனுப்பப்படுகிறது.
இதுதவிர சுய வேலைவாய்ப்பு பெற வங்கிக்கடன் மானியமும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான சுயவேலைவாய்ப்பு வங்கி கடன் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற்று சுயத்தொழில் புரிய விரும்பும் மாற்றுத்திறனாளி நபர்களுக்கு வங்கி கடன் மானியம் வழங்கப்படுகிறது. இதேபோல் பார்வையற்ற மாற்றுத்திறனாளி நபர்களுக்கு மாவட்டம் முழுவதும் பயணம் மேற்கொள்ள இலவச பேருந்து பயணசலுகைத் திட்டமும் செயல்படுத்தப்டுகிறது. இதர மாற்றுத்திறனாளி நபர்களுக்கு கல்வி பயிலுவதற்கு, பணிக்கு செல்வதற்கு மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கு பயணசலுகைத் திட்டம்.
75% கட்டண சலுகையின் மூலம் மாநிலம் முழுவதும் பயணம் மேற்கொள்ளும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதுதவிர பல்வேறு சலுகைகள் அரசால் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் மாற்றுத்திறனாளிகளுக்கான அரசின் உதவி தொகை குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், அறிவுசார் குறைபாடுடைய 75 சதவீதத்துக்கு மேல் கை, கால் கடுமையாக பாதிக்கப்பட்ட, தசைச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட, தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த, புற உலகு சிந்தனையற்ற மதி இறுக்கமுடைய மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர், பார்கின்சன் நோய், தண்டுவட மரப்பு நோய் ஆகிய நாட்பட்ட நரம்பியல் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் மாற்றுத்திறனாளிகள், தங்களது மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவ அடையாள அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மாற்றுத்திறனாளி ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தொடங்கப்பட்ட வங்கிக்கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன், அருகில் உள்ள தமிழ்நாடு இ-சேவை மையம், https://www.tnesevai.tn.gov.in/citizen/Registration.aspx என்ற முகவரியில், பராமரிப்பு உதவித்தொகை என்ற பிரிவில் விண்ணப்பிக்கலாம்.
வருவாய்த்துறையின் வாயிலாக சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,500 உதவித்தொகை பெற்று வரும் மாற்றுத்திறனாளிகள் தங்களின் விருப்பத்தின் பேரில் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை பெற்றிட இணைய வழியாக விண்ணப்பித்திடவும், மேலும் விவரங்களுக்கு திருச்சி கண்டோன்மெண்ட் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் அல்லது 0431-2412590 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது" இந்த தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications