திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ராஜீவ் கொலையில் உண்மை குற்றவாளிகளை எனக்கு தெரியாது.. காட்டிக் கொடுக்கும் பழக்கமும் இல்லை.. நளினி

Google Oneindia Tamil News

திருச்சி: ராஜீவ் கொலையில் உண்மை குற்றவாளிகள் யாரென்று எனக்கு தெரியாது என்று திருச்சி சிறப்பு முகாமில் கணவர் முருகனை சந்தித்து விட்டு வெளியே வந்த நளினி கூறினார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து சிறையில் இருந்து விடுதலையான இலங்கையை சேர்ந்த முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 4 பேரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சிக்கு அழைத்து வரப்பட்டு மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தனித்தனி அறைகளில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்தநிலையில் முருகனை பார்ப்பதற்காக அவரது மனைவி நளினி திங்கட்கிழமை காலை சென்னையில் இருந்து ரயில் மூலம் திருச்சி வந்தார். பின்னர் அங்கிருந்து காரில் திருச்சி சிறப்பு முகாமிற்கு வந்தார். அவருடன், 3 பெண்கள் மற்றும் வக்கீல்கள் உள்பட 7 பேர் வந்தனர். இவர்கள் அனைவரும் திங்கட்கிழமை காலை 10.20 மணி அளவில் முகாமிற்குள் சென்று முருகனை சந்தித்து பேசினார்கள்.

விடுதலைக்கு பிறகும் தொடரும் பிரிவு.. முகாமில் வைக்கப்பட்ட முருகன்! திருச்சியில் கணவரை சந்தித்த நளினிவிடுதலைக்கு பிறகும் தொடரும் பிரிவு.. முகாமில் வைக்கப்பட்ட முருகன்! திருச்சியில் கணவரை சந்தித்த நளினி

 நளினி சிறப்பு முகாம்

நளினி சிறப்பு முகாம்

இதனை தொடர்ந்து திங்கட்கிழமை மாலை 5.10 மணி அளவில் நளினி சிறப்பு முகாமில் இருந்து வெளியே வந்தார். மத்திய சிறை வாசலில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- 16 ஆண்டுகளாக மகளை பார்க்கவில்லை நான் கேள்விபட்டபடி, சிறைக்குள் 4 பேரும் உண்ணாவிரதம் இருக்கவில்லை. இத்தனை ஆண்டுகாலம் சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் திடீரென மீண்டும் அவர்களை சிறப்பு முகாமில் அடைத்ததால் முதலில் ஒரு நெருக்கடியான சூழல் இருந்தது. இப்போது எல்லாம் சரியாகிவிட்டது.

இலங்கை தூதரகம்

இலங்கை தூதரகம்

இலங்கை தூதரகத்தினா் ஏற்கெனவே ஜெயக்குமாா், ராபா்ட் பயஸை சந்தித்தபோது இலங்கைக்கு வந்தால் வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்தும் செய்து தருவதாகக் கூறினா். இலங்கையில் தற்போது நெருக்கடி ஏற்பட்டு பலரும் அகதிகளாக வெளியேறி வருகின்றனா். எனவே, அவா்கள் இலங்கை செல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. சாந்தன் மட்டுமே இலங்கை செல்ல விருப்பம் தெரிவித்துள்ளாா்.

 லண்டன் செல்ல விருப்பம்

லண்டன் செல்ல விருப்பம்

எனது கணவா் மீது எந்த வழக்கும் இல்லை. நானும், எனது கணவரும் லண்டன் சென்று மகளுடன் வசிக்க விரும்புகிறோம். மத்திய- மாநில அரசுகள் விரைந்து அவர்களை விருப்பப்படும் நாட்டுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது கணவரை லண்டனுக்கு அனுப்பி விடும்படி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். ஏனென்றால் அங்கு எங்கள் மகள் வசிக்கிறார்.

16 ஆண்டுகள்

16 ஆண்டுகள்

16 ஆண்டுகாலமாக எனது மகளை நான் பார்க்கவில்லை. அதனால் நாங்கள் மகளுடன் இருக்க ஆசைப்படுகிறோம். ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் எந்த நாட்டிற்கு செல்வது என்று இன்னும் முடிவு செய்யவில்லை. முகாமில் அடைத்து வைக்கக் கூடாது முதல்வரை நேரில் சென்று சந்திக்க வேண்டும் என்று கிடையாது. அவரே அனைத்தையும் பார்த்து கொள்கிறார். எங்களை வெளிநாடு அனுப்புவதற்காக பணிகளை அரசு சார்பில் மும்முரமாக செய்து வருவதாக தான் நினைக்கிறேன்.

பல ஆண்டுகள் சிறையில்

பல ஆண்டுகள் சிறையில்

பல ஆண்டுகளாக சிறையில் கழித்து வந்தவர்களை வெளியே அனுப்பாமல் மீண்டும் சிறப்பு முகாமில் அடைத்து வைப்பதை பார்க்கும்போது மனதுக்கு கஷ்டமாக தான் இருக்கிறது. அவர்களை வெளியே விட்டால் சமூகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கூறுவது தவறு. ஏனென்றால் முகாமில் இருப்பவர்களின் குடும்பத்தினர் பலரும் வெளியே வசித்து கொண்டு தானே இருக்கிறார்கள். அவர்களால் சமூகத்துக்கு எந்த பிரச்சினையும் இல்லை தானே. அதுபோல தானே முகாமில் இருப்பவர்களையும் வெளியே வாழவைக்க வேண்டும்.

வங்கிக் கணக்கு

வங்கிக் கணக்கு

அதற்கு முன்னதாக தூதரகம், வங்கிக் கணக்கு உள்ளிட்ட சில நடைமுறைகளை முடிக்க வேண்டும். மேலும், சில கோயில்களுக்கு சென்று சிறை காலத்தில் வேண்டிக் கொண்ட நோ்த்திக் கடன்களை வழங்க வேண்டும். காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த எங்கள் குடும்பத்தில் ஒருவா் குற்றத்தைச் செய்ததாக என் மீது சுமத்தப்பட்ட குற்றம் நீங்கினால்தான் எனது மனது சரியாகும். ராஜீவ்காந்தி கொலையில் தொடா்புடையவா்கள் யாரென்று எனக்குத் தெரியவில்லை. காட்டிக் கொடுக்கும் பழக்கம் இருந்திருந்தால் 32 ஆண்டுகள் சிறையில் இருந்திருக்க வேண்டிய அவசியமில்லை.

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு


குற்றச்சாட்டு சரியானால் தான் நிம்மதி நான் காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்தவர். எனது தாயாருக்கு காந்தி தான் பெயர் வைத்தார். இந்திரா காந்தி இறந்தபோது கூட எங்கள் குடும்பத்தில் யாரும் சாப்பிடாமல் அழுது கொண்டே இருந்தோம். ராஜீவ்காந்தி இறந்தபோதும் 3 நாட்களாக சமைக்காமல் அழுது கொண்டு தான் இருந்தோம். ஆனால் அவருடைய மரணம் தொடர்பான குற்றத்தில் நான் ஈடுபட்டதாக என் மீது குற்றச்சாட்டு இருக்கிறது. இது சரியானால் தான் என் மனதுக்கு நிம்மதி.

கணவர் முகாம்

கணவர் முகாம்

சிறையில் இருந்து வெளியே வந்தபிறகும் எனது கணவரை முகாமில் வைத்துள்ளது எனது மனதை பாதித்துள்ளது. தற்போது எனக்கு நிறைய வேலை இருக்கிறது. நாங்கள் வெளிநாட்டுக்கு செல்வதற்காக தூதரகத்துக்கு அலைய வேண்டி உள்ளது. எனது கணவருக்கு தூக்குதண்டனை வந்தபோது, அவர் தூக்கு தண்டனையில் இருந்து விடுதலை பெற வேண்டி கோவில்களில் தீமிதிக்க நேர்த்திக் கடன் இருந்தது. திருப்பதி கோவிலுக்கு நடந்தே செல்வதாக வேண்டுதல் இருந்தது. அதை எல்லாம் நிறைவேற்ற வேண்டும்.

பிரியங்கா காந்தி

பிரியங்கா காந்தி

சிறையில் பிரியங்கா காந்தி என்னை சந்தித்தபோது, ராஜீவ் கொலை வழக்கு குறித்து என்னிடம் கேட்டார். அப்போது எனக்கு தெரிந்த விஷயங்களை அவரிடம் கூறினேன். அது அவருக்கு திருப்தியாக இருந்ததா? என எனக்கு தெரியாது. அதை அவரிடம் தான் கேட்க வேண்டும். சிறப்பு முகாமில் எனது கணவர் உள்பட 4 பேரை சந்தித்து பேசியது மகிழ்ச்சியாக உள்ளது. எங்களை சந்தித்த அவர்களுக்கு நிறைய ஆறுதல் தேவைப்பட்டது. அவர்களை விரைந்து வெளியே எடுப்பதற்கான பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினோம்.

தமிழகம் எங்களுக்கு பாதுகாப்பாக உள்ளது

தமிழகம் எங்களுக்கு பாதுகாப்பாக உள்ளது

தமிழகம் எங்களுக்கு பாதுகாப்பாகவே உள்ளது. முதல்வா் மு.க.ஸ்டாலினை சந்தித்து தேவையற்ற கஷ்டங்களை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக சந்திக்கவில்லை. ராஜீவ் வழக்கில் தொடா்புடையதாக கூறப்பட்டு ஏற்கெனவே வெளியில் உள்ள பலரால் சமூகத்துக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. இப்போது, விடுதலையானவா்களாலும் எந்த பிரச்னையும் இருக்காது. இருப்பினும், சிலா் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். மேல்முறையீடு செய்வதாகவும் கூறுகின்றனா். அதிகபட்சம் 2 வாரங்களுக்குள் இத்தகைய நடைமுறைகள் முடிந்துவிடும் என எதிா்பாா்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக நளினி சிறப்பு முகாமிற்கு வருவதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கலெக்டர் பிரதீப்குமார் நேரில் சென்று சிறப்பு முகாமில் ஆய்வு நடத்தினார்.

English summary
Nalini Speech on Rajiv Gandhi Murder Case (ராஜீவ் காந்தி கொலையில் உண்மை குற்றவாளிகளை எனக்கு தெரியாது: நளினி பேட்டி): "I don't know who are the real culprits in Rajiv Gandhi murder," said Nalini, who released from prison recently and met her husband Murugan at the Trichy Special Camp. The Supreme Court ordered the release of 6 people, including Nalini, who were in jail in the former Prime MinisteR
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X