• search
திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

நீ கணவனை விட்டுட்டு வா... நா மனைவியை விட்டுட்டு வறேன்... நாம ஓடிப்போகலாம் - போலீசில் பஞ்சாயத்து

|
  கள்ளக்காதல் பஞ்சாயத்து, சிக்கி தவிக்கும் குழந்தைகள்- வீடியோ

  திருச்சி: திருமணமாகி நான்கு ஆண்டுகள் வாழ்ந்து ஒரு குழந்தையும் பெற்றெடுத்த பின்னர் கணவன், குழந்தையை விட்டு விட்டு பழைய காதலனோடு ஓடிப்போய் விட்டார் ஒரு இளம்பெண். பஞ்சாயத்து போலீஸ் ஸ்டேசனுக்கு போன பின்னரும் கலங்காமல் எனக்கு காதலன்தான் வேண்டும் என்று கூறி அவனோடு சென்று விட்டார் அந்த பெண். அவனும் தனது மனைவி பிள்ளைகளை விட்டு விட்டு காதலியோடு கம்பி நீட்டிவிட்டான். இடையில் சிக்கி தவிப்பது என்னவோ அந்த குழந்தைகள்தான்.

  ஒரு படத்தில் விவேக் ஊரை விட்டு ஓடிவந்த ஒரு ஜோடிக்கு திருமணம் செய்து வைப்பார். கடைசியில் அது கள்ளக்காதல் ஜோடி. இதில் பாதிக்கப்பட்ட அவளோட கணவனும், அவனோட மனைவியும் தனித்திருக்க அந்த இருவரையும் சேர்த்து வைப்பார். இப்போது பல ஜோடிகள் இப்படித்தான் கணவனை தவிக்க விட்டும், மனைவியை தவிக்க விட்டும் எஸ்கேப் ஆகி விடுகின்றன.

  பாதிக்கப்பட்ட நபரின் பெயர் கனகராஜ். அமைதியே உருவான கனகராஜ், திருச்சி மணச்சநல்லூர் அருகே உள்ள பெரகம்பி கிராமத்தைச் சேர்ந்தவர். சென்னையிலும், தன்னுடைய சொந்த கிராமத்திலும் ஹோட்டல் தொழில் செய்து வருகிறார். இவருக்கு சரண்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.

  அமைதியான வாழ்க்கை

  அமைதியான வாழ்க்கை

  சரண்யா, துறையூரை அடுத்த கீராம்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் கனகராஜ் சரண்யா திருமணம் நடைபெற்றது. மகிழ்ச்சியான வாழ்க்கையின் அடையாளமாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. அமைதியாக போன வாழ்க்கையில் சரண்யாவின் மாஜி காதலன் வடிவில் புயல் வீச ஆரம்பித்தது.

  பாச மழை பொழிந்த கணவன்

  பாச மழை பொழிந்த கணவன்

  மனைவியிடம் பாசமழை பொழிவார் கனகராஜ், அவரது மனைவியின் மேல் அதிக பாசமழை பொழிவார். புகுந்த வீட்டு குடும்பமும் மருமகளை மகள் போல நடத்தினர். எந்த தொந்தரவும் கிடையாது. அந்த சந்தோசத்தில் மண் விழும் வகையில் சம்பவங்கள் நடந்தன.

  காதலனை பார்க்க கல்லூரி போனார்

  காதலனை பார்க்க கல்லூரி போனார்

  பிசிஏ படித்த சரண்யா மேலே படிக்க வேண்டும் என்று கணவரிடம் கேட்கவே கனகராஜூம் சம்மதித்தார். பக்கத்து ஊருக்கு கல்லூரிக்குப் போன சரண்யாவின நடவடிக்கையில் மாற்றங்கள் ஏற்பட்டன. திடீரென்று வந்த மர்ம போனும் கனகராஜின் மண்டயை குடைய வைத்தது. சரண்யாவோ போனை வாங்கிப்பாருங்க உண்மை தெரியும் என்று கூறிவிட்டு கட் செய்தது ஒரு குரல்.

  காதல் மனைவியின் காதலன்

  காதல் மனைவியின் காதலன்

  கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்த சரண்யாவின் செல்போனை ஆராய்ந்த கனகராஜூக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வேறு ஒரு நபருடன் கட்டிப்பிடித்துக்கொண்டும், முத்தமிட்டும், அந்தரங்கமான புகைப்படங்களும் இருந்தன. உடம்பெல்லாம் கொதித்துப்போக சரண்யாவை அடித்து கேட்டார் கனகராஜ். அது தனது பழைய காதலன் என்றும் வேறு வேறு சாதி என்பதால் திருமணம் செய்ய முடியாமல் போனதாகவும் கதறினார். தெரியாமல் தப்பு பண்ணிட்டேன் என்றும் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் சரண்யா.

  கம்பி நீட்டிய மனைவி

  கம்பி நீட்டிய மனைவி

  கணவனுக்கு துரோகம் செய்து பழக்கப்பட்ட சரண்யா, கணவன், மாமனார், மாமியார், குழந்தைக்கு சாப்பாட்டில் மயக்க மருந்து கலந்து கொடுத்தார். அவர்கள் மயங்கிய நேரத்தில் அனைவரையும் விட்டு விட்டு குழந்தையை மட்டும் தூக்கிக்கொண்டு எஸ்கேப் ஆனார். காலையில் எழுந்து பார்த்த சரவணனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

  போலீசில் புகார்

  போலீசில் புகார்

  குழந்தையுடன் மனைவி மாயமானதைப் பார்த்து கதறி அழுதார். இருவரையும் மீட்டுக்கொடுங்கள் என்று போலீசில் புகார் கொடுத்தார். சிறுகானூர் போலீசார், சரண்யாவின் காதலன் செல்வத்தின் வீட்டிற்கு சென்று அவனது பெற்றோரிடம் விசாரித்தனர். திடீரென்று கனகராஜ் போனுக்கு பேசிய செல்வம், நாங்க துறையூரில் இருக்கோம், உன் பொண்டாட்டி உன் கூட வந்தா வந்து கூட்டிட்டு போ என்று திமிராக பேசினான்.

  சரண்யாவின் அடம்

  சரண்யாவின் அடம்

  துறையூர் பேருந்து நிலையத்திற்கு தனது உறவினர்களுடன் போய் மனைவி சரண்யாவை அடித்து உதைத்தார் கனகராஜ். செல்வத்தின் உறவினர்களும் செல்வத்தை அடித்தனர். கூட்டம் கூடவே பஞ்சாயத்து போலீஸ் ஸ்டேசனுக்கு போனது. அனைவரும் ஒன்றாக அமர்ந்து பஞ்சாயத்து பேசினர். சிறுகனூர் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் பஞ்சாயத்து நடைபெற்றது. நான் லட்சக்கணக்கில செலவு செய்து படிக்க வைத்தேன். அவன் ஈசியா கூட்டிட்டு போயிட்டான் வழக்கு போடுங்க என் பிள்ளையை எனக்கு மீட்டு கொடுங்கள் என்று கூறினார்.

  காதலன் போதும்

  காதலன் போதும்

  இருவர் மீதும் வழக்கு போட முடியாது தீர்ப்பு அவங்களுக்கு சாதகமாக இருக்கு என்று போலீஸ் கூறிய நிலையில் பதறிப்போனார் கனகராஜ். எனக்கு கணவன் குழந்தைகள் வேண்டாம் செல்வம் மட்டுமே போதும் என்று எழுதிக்கொடுத்து விட்டு செல்வத்தின் பின்னார் போனார் சரண்யா. அதைப்பார்த்த செல்வத்தின் மனைவியோ கையில் ஒன்றும் இடுப்பில் ஒன்றுமாக இரண்டு குழந்தைகளுடன் கதறி அழுதார்.

   குழந்தை மட்டும் போதும்

  குழந்தை மட்டும் போதும்

  கனகராஜின் பெற்றோர்களோ, அந்த பிள்ளையை அவகிட்டேயே கொடுத்திடு நாங்க வேற கல்யாணம் பண்ணி வைக்கிறோம் என்று கனகராஜிடம் கூறினர். அதற்கு கனகராஜ் மசியவில்லை. அவ என்னோட குழந்தை, நானே வளர்த்துக்கிறேன் என்று பிள்ளையை கையில் பிடித்துக்கொண்டு கண் கலங்க நடந்து போனார்.

  குழந்தைகள் பாதிப்பு

  குழந்தைகள் பாதிப்பு

  திருமணத்திற்கு முன்பே காதலில் உறுதியாக இருந்து ஓடிப்போனால் அது இரண்டு குடும்ப பிரச்சினையோடு முடிந்து விடும். திருமணம் முடிந்து குழந்தைகள் பிறந்த பின்னர் பழைய காதலர்கள் மீண்டும் இணைவதால் அவர்களை நம்பி வந்தவர்களும், பிறந்த குழந்தைகளும்தான் பாதிக்கப்படுகின்றனர். சினிமாவில் கூட இதுபோன்ற சீன்கள் வைத்திருக்க மாட்டார்கள். நீங்க எல்லாம் நல்லா வருவீங்கடா என்று கூறி வாயடைத்து நின்றது போலீஸ்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  Suprme court of India has ruled adultery is no longer a crime, striking down a 158-year-old colonial-era law which it said treated women as male property. It is advantage of so many illigal relationship. A married woman run away with her exboy friend at Manachanallur near Trichy.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more