குரூப் செக்ஸ்.. ஹோட்டல் ரூமை திறந்தால் அதிர்ச்சி.. போதையில் மாணவ, மாணவியர்கள்.. திருச்சியில் கொடுமை!
திருச்சி: திருச்சியில் உள்ள பிரபல பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவ மாணவியர்கள் போதைக்கு அடிமையாகி குரூப் செக்ஸில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பல்கலைக்கழகங்களில் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் பலர் தொடர்ந்து போதை பழக்கத்திற்கு அடிமையாகி இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனவே போதை பொருள் விநியோகங்களை கடுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்களும் சக மாணவர்களும் குரலெழுப்பி வருகின்றனர்.

போதை பொருள் பயன்பாடு
தமிழ்நாட்டில் போதைப்பொருட்களின் பயன்பாடு என்பது சமீப காலங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டில் கஞ்சா பயன்பாடு இவ்வளவு இருந்தது கிடையாது. ஆனால் தற்போது கஞ்சா மட்டுமல்லாது பல்வேறு போதை வஸ்துக்களின் பயன்பாடுகள் அதிகரித்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மட்டுமல்லாது பள்ளி, கல்லூரி மாணவர்களே இதற்கு அடிமையாகும் சூழல் உருவாகியுள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

பல்கலைக்கழக மாணவர்கள்
இந்நிலையில் இதனை உறுதிப்படுத்தும் விதமாக திருச்சியில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. மாவட்டத்தில் உள்ள பிரபல பல்கலைக்கழகத்தில் வெளிமாநில மற்றும் வெளிநாட்டு மாணவர்கள் பலர் தங்கி பயின்று வருகின்றனர். இவர்களிடையே சமீப நாட்களாக போதைப்பொருள் பயன்பாடுகள் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளன. இது இதர மாணவ, மாணவிகளுக்கும் பரவி வருகிறது. இந்நிலையில், இந்த பயன்பாடு மாணவர்களை மோசமான செயல்களை நோக்கி நகர்த்தியுள்ளது.

பாலியல் சேட்டை
பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியுள்ள மாணவ, மாணவியர் சிலர் இரவு நேரங்களில் வெளியேறுவதும் பின்னர் பிரபல ஓட்டல்களில் உணவு அருந்தி அங்கே அறை எடுத்து தங்குவதும் தொடர்கதையாகியுள்ளன. ஆனால் இவ்வாறு தங்குவது மட்டுமல்லாது, அந்த சமயங்களில் மாணவ, மாணவிகள் போதை பொருளையும் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். இந்த பிரச்னை இத்துடன் நின்று விடாமல் தங்களுடன் வரும் மாணவிகளிடம் மாணவர்கள் பாலியல் சேட்டைகளில் ஈடுபடும் நிலைக்கும் நகர்ந்துள்ளது.

கூட்டு பாலியல் செயல்பாடு
தொடக்கத்தில் போதை பொருட்களை மாணவிகளுக்கு அறிமுகம் செய்து வைத்து பின்னர் அவர்களை மெல்ல மெல்ல போதைக்கு அடிமையாக்கி விடுவதாக சொல்லப்படுகிறது. இதன் தாக்கம் காரணமாக மாணவ, மாணவியர்கள் என இருபாலினத்தவர்களுமே போதைக்கு முழுமையாக அடிமையாகி அது இல்லாமல் நாட்களை கடத்த முடியாத நிலைக்கு ஆளாகிவிடுகின்றனர். எனவே எப்போதாவது ஒருநாள் ஓட்டலுக்கு செல்லும் மாணவ மாணவியர்கள் இதனை வழக்கமாக செய்ய தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

போதையால் சீரழிவு
இம்மாதிரியான சந்திப்பின்போது கூட்டு பாலியல் செயல்பாடுகளில் ஈடுபட திட்டமிடப்படுவதாகவும், இதற்கு இணங்காத மாணவிகளுக்கு போதை பொருட்களை கொடுத்து இணங்க வைக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட நாளில் ஓட்டல்களில் அறையெடுத்து தங்கி, பின்னர் அவர்கள் இம்மாதிரியான கூட்டு பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். கூட்டு பாலியல் செயல்பாடுகள் நாளடைவில் பல்வேறு நோய்களுக்கு காரணமாக அமைந்துவிடும் என மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரித்து வரும் நிலையில், இது போன்ற சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications