தொடரும் ஐடி ரெய்டு.. திருச்சி விசிக மாநில நிர்வாகிகள் வீடுகளில் வருமானவரித்துறை அதிரடி சோதனை!
திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகிகள் வீடுகளில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.
Recommended Video

திருச்சி: திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகிகள் வீடுகளில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.
தமிழகத்தில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. முக்கியமாக திமுக கூட்டணி கட்சியினரின் வீடுகளில் கடுமையான சோதனைகள் நடந்து வருகிறது.
திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் கடந்த மூன்று நாட்களாக நடந்த ரெய்டு நேற்றுதான் முடிவிற்கு வந்தது. தற்போது புதிய திருப்பமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகிகள் வீடுகளில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.

சோதனை
நேற்று பெரம்பலூரில் விடுதலை சிறுத்தைகள் நிர்வாகி முன்னாள் மாவட்ட செயலாளர் தங்கதுரையின் வாகனத்தில் இருந்து ரூ.2.10 கோடி ரூபாய் பிடிபட்டது. தேர்தல் அதிகாரிகள் சோதனையில் இந்த பணம் பிடிபட்டது.

என்ன பணம்
இந்த பணம் தங்கத்துரையின் காரில் உள்ள கதவில் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது . குறிப்பிட்ட உளவு தகவல் மூலம் இந்த பணம் அங்கே பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்ட்டது . அதன்பின் தங்கதுரையிடம் நிர்வாகிகள் விசாரணை செய்தனர்.

விசாரணை செய்கிறார்கள்
இந்த விசாரணையின் முடிவில், விசிக நிர்வாகிகள் ரமேஷ் மற்றும் ராஜா ஆகியோரின் நிறுவனம் ஒன்றுக்கும் இந்த பணத்திற்கும் தொடர்பு இருப்பதாக தெரிந்து இருக்கிறது. இதையடுத்து இன்று தற்போது ரமேஷ் மற்றும் ராஜா ஆகியோரின் நிறுவனங்களில் சோதனை நடக்கிறது.

மன்னார்புரத்தில் சோதனை
மன்னார்புரத்தில் விசிக நிர்வாகி ராஜாவுக்கு சொந்தமான ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடக்கிறது. 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள். இந்த விசாரணை காரணமாக தற்போது அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications