தாசில்தார் ஆபீஸ்களில் ட்விஸ்ட்.. ஒரே நாளில் சிக்கிய மூன்று அரசு ஊழியர்கள்.. எல்லாருக்குமே ஒரு ஒற்றுமை
திருச்சி: திருச்சி விமானநிலையம் அருகே ராபியத்துல் பசிரியா என்பவர் திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் தனது கணவர் பெயரில் வீட்டுமனை வாங்கி சாத்தனூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்தார். அந்த இடத்துக்கு தனிப்பட்டா வேண்டி திருச்சி கிழக்கு தாலுகா அலுவலகத்தில் இதுதொடர்பாக நில அளவை உதவி ஆய்வாளர் தையல் நாயகி ரூ.13 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் நில அளவை உதவி ஆய்வாளர் தையல் நாயகியை கையும் களவுமாக பிடித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
திருச்சி விமானநிலையம் கபர்ஸ்தான் தெரு வள்ளுவர் நகரை சேர்ந்தவர் பஷீர் அகமது என்பவருடைய மகள் ராபியத்துல் பசிரியா என்பவர் திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் தனது கணவர் பெயரில் வீட்டுமனை வாங்கி அதனை சாத்தனூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்திருக்கிறார். இதைத்தொடர்ந்து அந்த இடத்துக்கு தனிப்பட்டா வேண்டி திருச்சி கிழக்கு தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்திருக்கிறார்.

நில அளவை உதவி ஆய்வாளர்
இதற்காக நிலஅளவை உதவி ஆய்வாளர் தையல்நாயகியை நேற்று முன்தினம் ராபியத்துல் பசிரியா சந்தித்துள்ளார். ஆனால் அவர் ரூ.13 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம். இதுகுறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் அவர் புகார் கொடுத்தார். இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனைப்படி, திருச்சி கிழக்கு தாலுகா அலுவலகத்தில் ராபியத்துல் பசிரியாவிடம் இருந்து ரூ.13 ஆயிரம் லஞ்ச பணத்தை நிலஅளவை உதவி ஆய்வாளர் தையல்நாயகி பெற்றுளளார். அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
உட்பிரிவு பட்டா
இதேபோல் திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா பொன்னு சங்கம்பட்டியை சேர்ந்த முருகேசன் என்பவர் தனக்கு சொந்தமான 31 சென்ட் புஞ்சை நிலத்தை அளந்து கொடுத்ததற்கும், உட்பிரிவு பட்டா கிடைக்க ஏற்பாடு செய்து கொடுத்ததற்கும், புலவரைப்பட நகல் (எப்.எம்.பி) கிடைக்க ஆவண செய்வதற்கும் விண்ணப்பித்துள்ளார். ஆனால் திருச்சி துறையூர் தாலுகா பொன்னுசங்கம்பட்டி கிராமத்துக்குரிய உரிமம் பெற்ற நில அளவையர் ராஜா (வயது 35) ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம்.
துறையூரில் கைது
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர், திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்திருக்கிறார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து துறையூர் தாலுகா அலுவலகத்தில் முருகேசனிடம் இருந்து நிலஅளவையர் ராஜா லஞ்சப்பணத்தை பெற்று வைத்திருந்தபோது, அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தர்மபுரி நில அளவையர்
இதேபோல் தர்மபுரி அருகே தனி பட்டா வழங்க விவசாயியிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது செய்யப்பட்டுள்ளார். தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே ஆலமரத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 32 வயதாகும் இளையராஜா என்ற விவசாயி இவர் தனது தந்தை பெயரில் இருந்த 5.5 ஏக்கர் நிலத்தை பாகப்பிரிவினை செய்து தனது பெயரிலும், தனது 2 சகோதரிகளின் பெயர்களிலும் பத்திரப்பதிவு செய்தார். அதற்கு தனி பட்டா வழங்க கோரி இளையராஜா ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்தார். பின்னர் அந்த நகலுடன் அவர் மணியம்பாடி கிராம நில அளவையர் விஜயகுமார் என்பவரை என்பவரை அணுகினார்.
10 ஆயிரம் லஞ்சம்
அப்போது அவர், ரூ.10 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே தனி பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறினாராம். இது தொடர்பாக இளையராஜா தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூ.10 ஆயிரத்தை நில அளவையரிடம் கொடுக்குமாறு இளையராஜாவிடம் கூறி அனுப்பினார்கள். இதையடுத்து அவர் அந்த பணத்தை மணியம்பாடியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகில் நில அளவையர் விஜயகுமாரிடம் கொடுத்தாராம்.
கையும் களவுமாக கைது
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன், இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார், லஞ்சம் பெற்ற நில அளவையர் விஜயகுமாரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தார்கள். நேற்று ஒரே நாளில் மூன்று நில அளவையர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்டுத்தி உள்ளது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications