அமித்ஷாவின் மாயாஜால வித்தைகள் இங்கு எடுபடாது... தமிழகம் தனித்துவமானது... ஜவாஹிருல்லா விமர்சனம்..!
திருச்சி: அமித்ஷாவின் அரசியல் மாயாஜால வித்தைகள் தமிழகத்தில் எடுபடாது என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
தமிழகம் எப்போதும் தனித்துவமானது என்பது மீண்டும் நிரூபணமாகும் என அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது;

அரசு நிகழ்ச்சி
''முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வா் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோா் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி தொடரும் என அரசு நிகழ்ச்சியில் அறிவித்து இருக்கிறார்கள். அதை அமித்ஷாவும் ஆமோதித்துள்ளார். அரசு நிகழ்ச்சியில் அரசியல் பேசுவது மரபுகளை மீறிய செயல்''.

பிசிசிஐ-ல் பொறுப்பு
''பாஜக வாரிசு அரசியலை விரும்பாது என அமித்ஷா கூறுகிறார். இதை விட பெரிய நகைச்சுவை வேறு இருக்க முடியாது. அமித்ஷாவின் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி அவர் மகன் ஜெய்ஷா பிசிசிஐ கிரிக்கெட் வாரியத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். இது ஊரறிந்த ஒன்று. எப்போது மத்தியில் பாஜக ஆட்சியை பிடித்ததோ, அப்போது இருந்தே தமிழகத்தின் உரிமைகள் பறிபோய் வருகின்றன''.

அதிமுக தோல்வியடையும்
''மக்களவைத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி தோல்வி அடைந்தது போல சட்டமன்ற தேர்தலிலும் படுதோல்வி அடையும். வரும் தேர்தலில் திமுக ஆட்சியமைக்கும். உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்படுவது ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் செயல். அமித்ஷா நிகழ்ச்சியில் கொரோனா கட்டுப்பாடு பின்பற்றப்படவில்லை''.

தமிழகத்தில் பலிக்காது
''தமிழகத்திற்கு என தனி அரசியல் கலாச்சாரம் இருக்கிறது. தமிழக மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு அதிகம். அமித்ஷாவின் மாயாஜால வித்தைகள் இந்தியாவின் பிற மாநிலங்களில் வேண்டுமானால் எடுப்பட்டிருக்கலாம், ஆனால் தமிழகத்தில் எடுபடாது''.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications