சாருஹாசன் பேரையோ சுஹாசினி பேரையோ சொன்னா யாரு ஓட்டு போடுவா.. அதான் எம்ஜிஆர் பேர சொல்றாரு- கே என் நேரு
திருச்சி: சாருஹாசன் பெயரையோ சுஹாசினி பெயரையோ சொன்னால் யாரும் ஓட்டு போட மாட்டார்கள், அதனால்தான் கமல்ஹாசன் , எம்ஜிஆர் பெயரை பயன்படுத்துகிறார் என திமுக முன்னாள் அமைச்சர் கே என் நேரு விமர்சித்துள்ளார்.
Recommended Video
அ.தி.மு.க வை நிராகரிக்கிறோம் என்கிற தலைப்பில் தி.மு.க சார்பில் கிராம சபை கூட்டம் இன்று நடைப்பெற்றது. திருச்சி மாவட்டம் உறையூர் குறத்தெருவில் நடைப்பெற்ற கிராம சபை கூட்டத்தில் தி.மு.க முதன்மை செயலாளர் கே.என்.நேரு கலந்து கொண்டு மக்களிடையே உரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நேரு, அமைச்சர்கள் மீது வைக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லையென்றால் அதை ஆளுநரிடம் கூற முடியாது.

திமுக முன்னாள் அமைச்சர்கள்
தி.மு.கவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்ட வழக்குகளிலிருந்து நிரபராதி என ஒவ்வொரு வழக்குகளிலிருந்தும் தி.மு.க வெளியே வந்து கொண்டு இருக்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் எந்த மாநிலத்திலும் பத்தாண்டுகளாக எந்த அமைச்சரும் ஒரே இலாக்காவில் பதவி வகித்தது கிடையாது.

அமைச்சர்கள்
தமிழ்நாட்டில் மட்டும்தான் அவ்வாறு இருக்கிறார்கள். அந்த அமைச்சர்கள் செய்த ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து நீதிமன்றம் செல்வதற்கு முன்பாக ஆளுநரிடம் தெரிவித்துள்ளோம். தி.மு.க வினர் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். அதை யாராலும் தடுக்க முடியாது.

பாமக
தி.மு.க வின் எழுச்சியை பொறுத்துக் கொள்ள முடியாததால் பா.ம.கவினர் தயாநிதி மாறன் கார் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள். தேர்தல் நேரத்தில் இது போன்ற இடையூறுகள் வரத்தான் செய்யும். தமிழக அரசு மினி கிளினிக்குகளை தேர்தலுக்காக தான் திறந்துள்ளார்கள்.

திமுக பக்கம்
பொங்கல் பரிசாக 2500 ரூபாய் தமிழக அரசு வழங்குவது தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என அ.தி.மு.க வினர் நினைக்கிறார்கள். ஆனால் அது எந்த வித தாக்கத்தையும் தேர்தலில் ஏற்படுத்தாது. தி.மு.க பக்கம் தான் மக்கள் நிற்கிறார்கள்.

ரஜினியும் கமலும்
கிராம சபை கூட்டங்களில் எங்கள் மீது மக்கள் எந்த குறையும் கூறவில்லை, நீங்கள் ஆட்சிக்கு வந்த உடன் தங்களுக்கு தேவையானதை செய்யுங்கள் என தான் கூறுகிறார்கள். கருணாநிதி ஆட்சியை ஸ்டாலின் வழங்குவார். அதனால்தான் கருணாநிதி ஆட்சியை வழங்குவோம் என ரஜினியும் கமலும் சொல்வதில்லை.

சாருஹாசன்
கமல்ஹாசன் தன் அண்ணன் சாருஹாசன் பெயரையோ நடிகை சுஹாசினி பெயரையோ கூறினால் யாரும் அவருக்கு ஓட்டு போட மாட்டார்கள். அதனால் தான் அவர் எம்.ஜி.ஆர் பெயரை பயன்படுத்துகிறார் என கூறினார். எம்ஜிஆர் கொடுத்த ஆட்சியை தருவோம் என ரஜினியும், தான் எம்ஜிஆரின் நீட்சிதான் என கமலும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
சப்ஜெக்ட்டுக்கு உயிர் வந்துருச்சு.. திருச்சி கிழக்கில் கமலை இறக்குங்க! திடீரென குரல் கொடுக்கும் மநீம -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications