வக்பு வாரியம்.. தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது! முதல்வருக்கு நன்றி - காதர் மொகிதீன்
திருச்சி: மத்திய அரசு கொண்டு வந்த வக்பு சட்டத்திற்கு எதிராக, தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்நிலையில் 'உமீத்' சட்டத்தின்படி தமிழகத்தில் வக்பு வாரியம் அமைக்கப்படாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்த அறிவிப்புக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து காதர் மொகிதீன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "இஸ்லாமிய மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் மற்றும் பெற்றுத் தரும் இயக்கமாக தி.மு.க செயல்பட்டு வருகிறது என்பதற்கு வக்பு வாரியம் தொடர்பான தமிழ்நாடு அரசின் அறிவிப்பு ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும். முஸ்லிம் சமுதாயத்தின் நன்மைக்காக தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு அனைத்து வகைகளிலும் செயல்பட்டு வருகிறது.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்ததுடன் தமிழ்நாடு சட்டப் பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. அரசு வழக்கு தொடர்ந்தது. பாலஸ்தீன மக்கள் அனுபவித்து வரும் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து தொடர்பாகவும் தொடர்ந்து குரல் எழுப்பி வருவது தி.மு.க. அரசுதான். ஒன்றிய அரசு கொண்டு வந்த வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த வரிசையில் ஒன்றிய அரசு அவசர கதியில் கொண்டு வந்த 'உமீத்' சட்டத்தின்படி தமிழ்நாடு வக்பு வாரியம் அமைக்கப்படாது என்று தமிழ்நாடு அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது " என்று கூறியிருக்கிறார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications