திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உங்கள் உயிரைக் கொடுக்க வேண்டாம்.. ஓட்டை மட்டும் கொடுங்கள்.. தமிழகத்தை மீட்போம்.. கமல் கோரிக்கை

Google Oneindia Tamil News

திருச்சி: உங்கள் உயிரைக் கொடுக்க வேண்டாம். ஓட்டை மட்டும் கொடுங்கள். தமிழகத்தை மீட்போம் என கமல்ஹாசன் கோரிக்கை விடுத்தார்.

திருச்சி நாடாளுமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஆனந்த ராஜாவை ஆதரித்து கமல்ஹாசன் திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசுகையில் என் அண்ணன் சந்திரஹாசன் இல்லாத போது நான் இங்கு வருவது மூன்றாவது முறை. அண்ணன் இருக்கும் போதே திருச்சியில் மக்களுக்கு எதிராக செய்யப்படும் செயல்கள் என் காதில் விழுந்தன. இந்த கோபம் தான் என்னை களத்தில் இறக்கியது.

இன்னொருவர் போட்ட இலையில் ரெண்டு பேர் சாப்பிடுகின்றனர்- கமல்! இன்னொருவர் போட்ட இலையில் ரெண்டு பேர் சாப்பிடுகின்றனர்- கமல்!

மஞ்சள் தண்ணீர்

மஞ்சள் தண்ணீர்

தண்ணீரில் மஞ்சள் கலந்து ஒரு சில சடங்குகளை நாம் செய்வோம். ஆனால் இப்போது தண்ணீரே மஞ்சள் நிறத்தில்தான் வருகிறது.
குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும்.

தனியார் வசம்

தனியார் வசம்

அரசு பள்ளிகளின் தரம் உலக தரத்திற்கு உயர்த்தப்பட வேண்டும். மக்களின் நலனை பார்க்க வேண்டிய அரசு டாஸ்மாக் கடைகளை கையில் எடுத்துக் கொண்டு, பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைத்துள்ளது.

மக்கள் நீதி மய்யம்

மக்கள் நீதி மய்யம்

மிருகங்களுக்கு கூட தண்ணீரில் கழிவு நீர் கலக்கக் கூடாது என்பது தெரியும். ஆனால் அது அரசுக்கு தெரியாமல் போனது ஆச்சரியம். தண்ணீரில் கழிவு நீர் கலப்பதை தடுக்க முடியாத அரசுகள் இங்கு ஆட்சியில் இருக்கிறது. இது நாடாளுமன்ற தேர்தல் தானே இதில் மக்கள் நீதி மய்யம் என்ன செய்ய போகிறது என நினைக்க வேண்டாம்.

உடைந்த பாலங்கள்

உடைந்த பாலங்கள்

திருச்சிக்கான பிரதிநிதியை டெல்லிக்கு அனுப்ப வேண்டிய தேர்தல் என எண்ணி வாக்களியுங்கள்.

பாலம் கட்டுகிறேன் என்று சொன்ன பாலங்களையே கட்டவில்லை. உடைந்த பாலங்களையா சரி செய்ய போகிறார்கள்???

ஏவல் துறை

ஏவல் துறை

நல்ல செயல்களை மக்களுக்காக செய்ய வேண்டிய இடம். காவல் துறையை ஏவல் துறையாக மாற்றியுள்ள நிலைமையை மாற்றி நம்மை பாதுகாக்கும் காவல்துறையினரை நாம்தான் பாதுகாக்க வேண்டும். என்று அவர் பேசினார்.

வடநாட்டு

வடநாட்டு

எங்கள் வேட்பாளர் ஒரு சில வார்த்தைகள் பேசுவார். மற்றவர்களை போல் எங்கள் வேட்பாளர்கள் சிலை மாதிரி நிற்கமாட்டார்கள். எனவே அவர்களும் ஒரு சில வார்த்தைகள் பேசுவார்கள். தமிழர்கள் தேசிய நீரோட்டத்தில் கலக்க மாட்டார்கள் என வடநாட்டு அரசியல்வாதிகள் சொல்கின்றனர். அண்ணா கூறியதை போல் தெற்கு தேய்கிறது என தேய்த்து கொண்டே இருக்கிறார்கள்.

உயிரை தடுப்பது

உயிரை தடுப்பது

மனிதனுக்கு எதிரான செயல்தான் மணல் திருட்டு. மக்களுக்கான திட்டங்களை செய்யாத அரசுகளை அகற்ற வேண்டும். அரசியலுக்கு நாங்கள் சம்பாதிக்க வரவில்லை.
இது சம்பாதிக்கும் இடம் இல்லை. நமது எதிர்காலத்தை பற்றி சிந்தித்து செயல்படுகிற நேரம். உங்கள் உயிரை கொடுக்க வேண்டாம். இப்போதைக்கு ஓட்டை மட்டும் கொடுங்கள்.பிறகு கொஞ்சம் கொஞ்சமாக செத்து கொண்டிருக்கும் தமிழகத்தை மீட்போம். உயிரை கொடுப்பது முக்கியம், போகும் உயிரை தடுப்பதுதான் முக்கியம் என்றார் கமல்ஹாசன்.

English summary
Kamal Haasan asks vote for his party, other than this he doesnt need fan's soul.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X