காவல் நிலையத்தில் எஸ்ஐயுடன் அத்துமீறல்.. தான் தப்பிக்க பொய் சொல்லி மாட்டிய பெண் போலீஸ்!
Recommended Video

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் தன்னுடன் பணியாற்றும் எஸ்ஐ தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சிக்கிறார் என பெண் போலீஸ் ஒருவர் எஸ்பி அலுவலகத்தில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். ஆனால் இந்த சம்பவத்துக்கு புகார் கொடுத்த பெண்ணும் உடந்தை என்பது வீடியோவில் தெரியவந்தது.
திருச்சி காவல் நிலையத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் இரவு பணியின் போது அங்கு பணியாற்றும் பெண் போலீஸுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எஸ்பி அலுவலகத்தில் புகார் எழுந்தது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட எஸ்ஐயை சஸ்பெண்ட் செய்து எஸ்பி உத்தரவிட்டார். இந்த பெண் போலீஸின் புகாரால், தான் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை அறிந்த எஸ்ஐ, "நான் அந்த பெண் போலீஸை பாலியல் தொந்தரவு செய்தேனா. நாங்கள் இருவரும் எப்போதும் இப்படிதானே இருப்போம்.

மறுவிசாரணை
அதென்ன என் மீது மட்டும் நடவடிக்கை என்று கேட்டு அந்த எஸ்ஐ, பெண் போலீஸ் மீதும் புகார் அளித்தார். இதனால் குழம்பிய எஸ்பி, ஜீயபுரம் டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் தலைமையில் மறுவிசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

சீண்டல்
மேலும் காவல் நிலையத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்யுமாறு டிஎஸ்பிக்கு எஸ்பி உத்தரவிட்டார். அதை ஆய்வு செய்த போதுதான்அதிர்ச்சி சம்பவம் காத்திருந்தது. ஒரு நாள் இரவு பணியின் போது பெண் போலீஸின் அருகில் சென்ற பாலசுப்பிரமணியன் அவரிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபடுகிறார்.

போலீஸ் எஸ்ஐ
இதைத் தொடர்ந்து மீண்டும் ஒரு முறை அவரிடம் சென்று அது போன்ற சீண்டல்களில் ஈடுபடுகிறார். இதற்கு அந்த பெண் போலீஸ் எதிர்ப்பே தெரிவிக்கவில்லை என்பதுதான் ஹைலைட். சுமார் 2 நிமிடங்கள் 50 வினாடிகள் ஓடும் இந்த வீடியோவில் எஸ்ஐக்கு பெண் போலீஸ் ஒத்துழைப்பு கொடுப்பது தெரியவந்தது.

இரு குழந்தைகள்
முன்னதாக இந்த லீலைகளின் போது காவல் நிலைய வளாகத்திற்கு பைக்கில் வந்த உளவுத்துறை போலீஸ்காரர் வரும் போது வண்டி வெளிச்சத்தை பார்த்து இருவரும் ஒதுங்கி கொண்டனர். பின்னர் எஸ்ஐ வெளியே சென்றதும் உளவுத்துறை போலீஸிடம் அந்த பெண் போலீஸ் பொய்யாக புகார் அளித்தது தெரியவந்தது. இந்த புகாரில் சம்பந்தப்பட்ட இருவருக்கும் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications