நான் இறந்துவிட்டேன்! தொகுதியும் காலியாகிடுச்சி! தனக்கு தானே பேஸ்புக் பதிவு போட்ட லால்குடி எம்எல்ஏ
திருச்சி: தனக்கு தானே மரண செய்தியை லால்குடி தொகுதி எம்எல்ஏ சவுந்திரபாண்டியன் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், லால்குடி சட்டசபை தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறை எம்எல்ஏவாக இருப்பவர் சவுந்திரபாண்டியன். இவர் கடந்த சில மாதங்களாக அரசு விழாக்களில் பங்கேற்காமல் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் புதிய பேருந்து நிலையம், வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் புதிய அலுவலகம் மற்றும் சார் பதிவாளர் அலுவலக கட்டடம் கட்டுவதற்கான இடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆனால் இந்த ஆய்விலும் லால்குடி சட்டசபை உறுப்பினர் என்ற முறையில் சவுந்திரபாண்டியன் பங்கேற்கவில்லை.
இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியானது. அதில் யார் யார் கலந்து கொண்டனர் என்பதெல்லாம் தெரியவந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு தன்னை அழைக்கவில்லை என்ற காரணத்தால் சவுந்திரபாண்டியன் தான் இறந்துவிட்டதாக ஒரு கமென்ட்டை போட்டுள்ளார்.
இதுகுறித்து பேஸ்புக் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆக இருக்கக்கூடிய சௌந்தர பாண்டியன் இயற்கை எய்தி விட்டதால் அந்த தொகுதி காலியான இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது என பதிவிட்டுள்ளது திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
முதல்வர் விஜய் டெல்லி போக காரணமே இதுதானே.. உடைத்து பேசிய ஸ்டாலின்! ஸ்டன் ஆன தவெகவினர்! -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு












Click it and Unblock the Notifications