அடப்பாவிகளா.. இந்த கொரோனா காலத்திலும் கசமுசா மசாஜா.. ரெய்டு வந்த போலீஸ்.. தப்பி ஓடிய பெண்கள்!
மசாஜ் சென்டர் இயங்கி வந்ததால் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்
திருச்சி: மசாஜ் என்ற பெயரில் கசமுசா வேலைகளும் நடந்துள்ளன.. அத்துடன் ஊரடங்கின்போது மசாஜ் சென்டரை திறந்து வைத்து உட்கார்ந்திருந்தனர் பெண்கள்.. போலீஸை பார்த்ததும் இவர்கள் தலைதெறிக்க தப்பித்து ஓட்டம் பிடித்த சம்பவம் திருச்சியை திகைக்க வைத்துள்ளது!!
இந்தியாவில் கொரோனாவைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது.. லாக்டவுன் போடப்பட்டு உள்ளதால் மக்கள் அதற்கு கட்டுப்பட்டு வீடுகளில் முடங்கி உள்ளனர். 14-ம் தேதியுடன் இந்த ஊரடங்கு முடிவடைந்தாலும் தொற்று பரவல் காரணமாக, இந்த ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30 வரை நீட்டிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அதுகுறித்த ஆலோசனைகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது

எனினும், அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக பால், காய்கறி, மளிகை போன்றவைகள் மட்டும் விற்க அனுமதி தரப்பட்டுள்ளது.. இந்நிலையில் அரசின் எச்சரிக்கையையும் மீறி திருச்சி உறையூரில் ஒரு மசாஜ் சென்டர் மூடப்படாமல் இயங்கி வந்துள்ளது.
இது ஒரு ஆயுர்வேத மசாஜ் சென்டர் போலும்.. அதில் ஆண்கள், பெண்கள் என ஒரு சிலர் மசாஜ் சென்டருக்கு சென்று மசாஜ் செய்து வந்ததாக அப்பகுதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மசாஜ் என்ற பெயரில் சில முறைகேடான செயல்களும் நடப்பதாக புகார்கள் வந்தன... இதையடுத்து, அந்த மசாஜ் சென்டருக்குள் அதிரடியாக அதிகாரிகள் நுழைந்தனர்.. அப்போது 2 பெண் ஊழியர்கள், ஒரு சில கஸ்டமர்களும் மசாஜ் சென்டரில் இருந்தனர்.
அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவர்களை விசாரித்து கொண்டிருந்தபோதே, அங்கிருந்த பெண் ஊழியர்கள் திடீரென தப்பி ஓடிவிட்டனர். ஊரடங்கை மீறி, குறிப்பிட்ட லைசன்ஸ் இல்லாமல் அந்த மசாஜ் சென்டரை நடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் வெளிமாநில இளம்பெண்களை வைத்து மசாஜ் என்ற பெயரில் சிலமுறைகேடான செயல்கள் நடந்து வந்ததும் தெரியவந்தது. பின்னர் அந்த சென்டருக்கு உடனடியாக சீல் வைக்கப்பட்டுள்ளது.. இந்த மசாஜ் சென்டர் நடத்தி வந்தவர் யார் என்ற விசாரணையும் முடுக்கி விடப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு நேரத்தில் இப்படி திருச்சி நகரிலேயே மசாஜ் சென்டர் இயங்கிவந்தது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.
-
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications