சகாயம் ஐஏஎஸ்சின் 'மக்கள் பாதை' அமைப்பினர் சைக்கிள் பேரணி.. கண்ணீர் விட்ட அய்யாக்கண்ணு
திருச்சி: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சகாயம் ஐஏஎஸ் தலைமையில் இயங்கும் மக்கள் பாதை அமைப்பினர் கன்னியாகுமரி முதல் சென்னை வரை சைக்கிள் பேரணி சென்று வரும் நிலையில் திருச்சிக்கு வந்தடைந்தனர் . அவர்களை விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு கண்ணீர் மல்க வரவேற்றார்.
Recommended Video
வேளாண் சட்டத்தினை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சகாயம் ஐஏஎஸ் தலைமையில் இயங்கும் மக்கள் பாதை இயக்கம் சார்பில் கன்னியாகுமாரி முதல் சென்னை வரை சைக்கிள் பேரணி செல்ல முடிவு செய்தனர்.

அதனடிப்படையில் கடந்த 31ம் தேதி 15க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கன்னியாகுமரியில் சைக்கிள் பேரணியினை துவங்கி வரும் 7ம் தேதி சென்னையில் முடிக்க திட்டமிட்டுள்ளார்கள்
இந்த சைக்கிள் பேரணி இன்று காலை திருச்சி சமயபுரம் நெ. 1 டோல்கேட் வழியாக சென்னை நோக்கி சென்ற போது சைக்கிள் பேரணியில் வந்த மாணவர்களை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு கண்ணீர் மல்க வரவேற்று அவர்களுக்கு பொன்னாடை அணிவித்த கெளரவித்தார். பின்னர் ஜல்லிக்கட்டு போராட்டம் போல விவசாயிகள் போராட்டமும் விரைவில் தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டமாக நடத்தவுள்ளோம் என செய்தியாளர்களிடம் கூறினார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications