இங்க கூடவா செல்பி.. ஒரு விவஸ்தை இல்லையா.. மனசுல ஈரமே இல்லையா.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
சுஜித் அடக்கம் செய்யப்பட்டபோது செல்பி எடுத்துள்ளார் ஒரு நபர்
Recommended Video
மணப்பாறை: "ஏன்யா.. நீயெல்லாம் ஒரு மனுஷன்தானா? எங்கே செல்பி எடுக்கணும்"..ன்னு ஒரு விவஸ்தை இல்லையா? என்று கேட்டு நெட்டிசன்கள் கொந்தளித்துள்ளளனர்.
குழந்தை சுர்ஜித் உயிரோடு கிடைத்துவிட மாட்டானா என்று பொதுமக்கள் கண்ணீரும் கம்பலையுமாக காத்து கிடந்தனர். வீட்டில் இருக்க நிலை கொள்ளாமல், நிகழ்விடத்துக்கே வந்து குவிந்துவிட்டனர்.. சுஜித்தின் மீட்பு பணிகள்தான் தமிழக டிவிக்களில் ஓடிக் கொண்டிருந்தன.
சுஜித் இறந்ததுமே மக்களின் துக்கம் பெருகிவிட்டது... தங்கள் வீட்டு பிள்ளைபோலவே கலங்கி போய் உள்ளனர்.. அவனது உடலை அடக்கம் செய்ய திரண்டு வந்துவிட்டனர்... அழுகிய உடலுக்கு போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டு, ஒப்படைக்கப்பட்டதுமே இறுதிசடங்கு வேலைகள் ஆரம்பமாயின.

செல்பி
சுஜித்தின் உடல் அடக்கம் செய்யப்படும்போது பொதுமக்களும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். ஆனால், கல்லறையிலும் ஒருவர் செல்பி எடுத்தது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இது சம்பந்தமான போட்டோக்களும் இணையத்தில் வைரலாயின. இதை பார்த்து நெட்டிசனகள் ஆவேசமாகிவிட்டனர்.

பதிவுகள்
"ஏன்யா.. நீயெல்லாம் ஒரு மனுஷன்தானா? எங்கே செல்பி எடுக்கணும்..ன்னு ஒரு விவஸ்தை இல்லையா?" என்று கோபத்துடன் பதிவுகளை போட்டுள்ளனர். எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் உடனே ஒரு செல்பி எடுப்பது ஒன்றாகிவிட்டதுதான்.

விபத்து
ஆனால் இந்த விபரீதம் சிலநேரங்களில் விபத்துக்களில்கூட நடந்துள்ளது. விபத்து ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நேரத்தில் அவர்களை மீட்காமல், அதையும் செல்பி எடுப்பது தமிழகத்தில் நடந்துள்ளது. வெறிகொண்டு அரிவாளை தூக்கி வெட்டியபோதும், அதையும் தடுத்து நிறுத்தாமல் செல்போனில் வீடியோ எடுப்பதையும் தமிழகம் கண்டுள்ளது.

துக்க நிகழ்வு
இப்படி உயிர் போவதைகூட செல்பி எடுப்பவர்கள் மனசு வைத்திருந்தால், பலஉயிர்களைகூட காப்பாற்றி இருக்க முடியும். ஆனால் உயிர்களின் மதிப்பு இவ்வளவுதானா? சுஜித் இறந்து இந்தியாவே சோகத்தில் மூழ்கியுள்ள நிலையில், ஒரு துக்க நிகழ்வில், மயானத்தில், செல்ஃபி எடுத்துக் கொள்ளும் உச்சக்கட்ட கொடூரர்களை என்ன செய்வது.. அந்த உசுருக்கும் அந்த இடத்துக்கும் என்னதான் மரியாதை?!
-
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications