திருச்சியில் டாஸ்மாக் முன்பு வாலிபர் ஓட ஓட விரட்டி தலை துண்டித்து படுகொலை
திருச்சி: திருச்சியில் டாஸ்மாக் முன்பு வாலிபர் ஒருவர் ஓட ஓட விரட்டி தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்ட இளைஞரின் உடலைக் கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Recommended Video
திருச்சி கொட்டப்பட்டு எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் சின்ராசு(21). இவருக்கும் பொன்மலைப்பட்டி பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக இன்று பொன்மலைப்பட்டி கடை வீதி பகுதியில் சின்ராசு சென்று கொண்டிருந்த போது அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த நபர்கள் ஓட ஓட விரட்டி தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இதனை கண்ட அப்பகுதியில் உள்ளவர்கள் அலறி அடித்துக்கொண்டு கடைகளை பூட்டி விட்டு ஓட்டம் பிடித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொன்மலை காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முன்விரோதம்
இதனை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். முதல்கட்ட விசாரணையில் பொன்மலை ஆட்டோ குழந்தை என்பவரின் மகன் அலெக்ஸ்(24) என்பவர் முன்விரோதம் காரணமாக சின்ராசுவை வெட்டி கொன்றதாக விசாரணையில் தொிய வந்துள்ளது. அலெக்ஸ் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. அப்பகுதி பேக்கரியில் உள்ள சிசிடிவி கேமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

வெட்டிக்கொல்ல முயற்சி
திண்டுக்கல்லில் பட்டப்பகலில் செல்போன் சர்வீஸ் கடை உரிமையாளரை 3 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டியது. ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த பயங்கரம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

திண்டுக்கல்
திண்டுக்கல் பெரியகடைவீதி பகுதியை சேர்ந்தவர் மீரான் பாபு( வயது 35) இவர் அதே பகுதியில் செல்போன் சர்வீஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். இதனிடையே நேற்று மதியம் கடையில் இருந்து வேலை விஷயமாக சட்டாம்பிள்ளை தெரு பகுதியில் நடந்து வந்தார்.
அப்போது மர்ம கும்பல் ஒன்று அவரை வழி மறித்து அரிவாள் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கியது. தப்பிக்க முயன்ற அவர் அங்கிருந்து ஓட முயன்றார். ஆனால் விடாமல் விரட்டி விரட்டி வெட்டியது. கடுமையாக போராடிய மீரான் பாபு ஒரு கட்டத்தில் அவர்களை கொடூர தாக்குதலால் நிலைகுலைந்து கீழே விழுந்தார்.

கொடூரம்
ரத்த வெள்ளத்தில் சரிந்த மீரான் பாபு எந்த சூழலிலும் உயிர் பிழைத்துவிடக்கூடாது என்று கருதிய கும்பல் அவரை கத்தியால் கடுமையாக குத்தியும், வெட்டியும் தாக்கியது. 3பேர் கொண்ட கும்பல் இந்த சம்பவத்தை அரங்கியேற்றிய நிலையில், சிறிது நேரத்தில் இருசக்கர வாகனத்தில் தப்பிசென்றனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications