எனக்கு எஜமானர்கள் திருவெறும்பூர் மக்கள் தான்! பதவி வந்தும் பணிவு மாறாத அமைச்சர் அன்பில் மகேஷ்!
திருச்சி: தனக்கு கிடைக்கும் பாராட்டுகளுக்கும், புகழுக்கும் திருவெறும்பூர் தொகுதி வாக்காளர்கள் தான் சொந்தக்காரர்கள் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இப்போதும் ''மகேஷ் வருது'', ''எங்க அண்ணே வருது'' என திருவெறும்பூர் தொகுதி மக்களும், இளைஞர்களும் தன்னிடம் உரிமை கொண்டாடுவதை விட வேறு ஒன்றும் தனக்கு பெரிதாக தெரியவில்லை என அவர் கூறியிருக்கிறார்.
திருச்சியில் நடைபெற்ற பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், பதவி வந்தாலும் தனது பணிவு மாறவில்லை என்பதை உணர்த்தியுள்ளார்.

பட்ஜெட் விளக்கம்
தமிழக பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நடைபெற்றது. அந்த வகையில் திருச்சியில் நடைபெற்ற அந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், தனது திருவெறும்பூர் தொகுதி மக்களை கொண்டாடும் வகையில் வார்த்தைக்கு வார்த்தை புகழ்ந்து அவர்களை பெருமைப்படுத்தினார். இன்று அமைச்சர் என்கிற முறையில் தனக்கு கிடைக்கும் மரியாதைக்கும், பாராட்டுகளுக்கும் தனது தொகுதி வாக்காளர்கள் தான் சொந்தக்காரர்கள் எனத் தெரிவித்தார்.

பேச்சில் பணிவு
இதேபோல் திருவெறும்பூரை பொறுத்தவரை தனது தாய் வீடாக கருதுவதாகவும் ஓட்டுக்கேட்கும் போது ஒரு வேட்பாளராக எந்த மனநிலையில் இருந்தேனோ அதேபோல் தான் இன்றும் தாம் மக்களை சந்தித்து வருவதாக பேச்சில் பணிவு காட்டினார். மேலும், திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது தண்ணீர் வரவில்லை என்றால் கூட தனக்கு மக்களிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வரும் என்றும் ஒரு கவுன்சிலர் பார்க்க வேண்டிய பணிகளையும் தாம் பார்த்து மக்களின் குறைகளை தீர்த்து வைத்ததை நினைவூட்டினார்.

உரிமையுடன் மக்கள்
இன்று தாம் அமைச்சராக இருந்தாலும், ''மகேஷ் வருது'', ''எங்க அண்ணே வருது'' என திருவெறும்பூர் தொகுதி மக்களும், இளைஞர்களும் தன்னிடம் உரிமை கொண்டாடுவதை விட வேறு ஒன்றும் தனக்கு பெரிதாக தெரியவில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். இதன் மூலம் என்றும் தனது குணமும், பண்பும் மாறாதது என்பதை மிகத் திட்டவட்டமாக அவர் அந்தப் பொதுக்கூட்டத்தில் உணர்த்தியுள்ளார்.

செந்தில்குமார் எம்.பி.
முன்னதாக பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்திற்கு சிறப்புரையாற்ற வருகை தந்திருந்த தருமபுரி எம்.பி. செந்தில்குமாரை குறிப்பிட்டு, இவரை போன்று 10 நபர்கள் இருந்தால் திமுகவை எந்தக் காலத்திலும் யாராலும் அசைக்க முடியாது என அமைச்சர் அன்பில் மகேஷ் பாராட்டினார்.












Click it and Unblock the Notifications