விளையாட்டில் வினை..திருச்சியில் சிரித்த விஜயபாஸ்கர்! கடுகடு கோபத்தில் KN நேரு..அதிகாரிகளுக்கு டோஸ்!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சியில் நடைபெற்ற தடகளப் போட்டிகளுக்கு முன்னாள் அமைச்சரும் புதுக்கோட்டை மாவட்ட செயலாளருமான விஜயபாஸ்கரின் பிளக்ஸ் பேனர்களை கண்டு அமைச்சர் கேஎன் நேரு, கோபமடைந்ததாகவும், நிகழ்ச்சி நடத்திய அதிகாரிகளிடம் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அதிமுக - திமுகவினரிடையே மோதல் வெடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திருச்சி வேட்பாளராக அதிமுக சார்பில் கருப்பையா களமிறக்கப்பட்ட நிலையில் அவருக்கு ஆதரவாக புதுக்கோட்டையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான சி.விஜயபாஸ்கர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

KN Nehru C Vijayabaskar AIADMK DMK Trichy

தற்போது திருச்சியின் ஆளுங்கட்சியின் அமைச்சரான கேஎன் நேருவின் செல்வாக்கே ஓங்கி இருக்கிறது. அவரோடு சேர்ந்து மற்றொரு அமைச்சரான அன்பில் மகேஷ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பல்வேறு பகுதிகளில் மிக தீவிரமாக பணியாற்றினர். இந்த நிலையில் தேர்தல் நிறைவடைந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் பெரு வெற்றி பெற்றார். கருப்பையா சுமார் ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்திக்க நேர்ந்தது.

இந்த நிலையில் தான் தற்போது முன்னாள் அமைச்சருக்கும் இந்நாள் அமைச்சருக்கும் இடையே மோதல் வெடித்திருப்பதாக கூறுகின்றனர் திருச்சி பகுதி வாசிகள். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் திருச்சியில் இருக்கும் அண்ணா விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நேற்று தொடங்கியது. அரசு சார்பிலான நிகழ்ச்சி என்றாலும் வீரர்களுக்கு உணவு தங்குமிடம் மற்றும் விளம்பர செலவுக்காக பல்வேறு நபர்களிடமிருந்து நன்கொடை பெறப்பட்டிருக்கிறது.

அந்த வகையில் முன்னாள் அமைச்சரான விஜயபாஸ்கர் நிகழ்ச்சிக்கு தனது சி.விஜயபாஸ்கர் ஸ்போர்ட்ஸ் அகாடமி மூலம் நன்கொடை வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திருச்சியில் பல்வேறு பகுதிகளிலும் அண்ணா விளையாட்டு அரங்கத்திற்கு செல்லும் வழியில் சிவிபி ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.

மேலும் விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை எடுத்து பரவ விட்டனர். இந்த நிலையில் இந்த தகவல் குறித்து நகராட்சி நிர்வாக துறை அமைச்சரும் மூத்த திமுக நிர்வாகியுமான கேஎன் நேருவுக்கு தகவல் சென்றதாக கூறப்படுகிறது. இதை அடுத்து மாவட்ட விளையாட்டு அதிகாரிகளை அழைத்த அவர் அவர்களிடம் கோபமாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும் திருச்சியில் புதுக்கோட்டையைச் சேர்ந்த முன்னாள் அதிமுக அமைச்சரின் புகைப்படங்கள் அடங்கிய பிளக்ஸ் பேனர்களை ஏன் வைத்தீர்கள்? அதற்கு அனுமதி கொடுத்தது யார்? என கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ந்து போன அதிகாரிகள் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்துள்ளனர்.

அவரை சமாதானம் செய்த நிலையில் விளையாட்டு போட்டிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து அங்கிருந்த சில பிளக்ஸ் பேனர்கள் எடுத்துச் செல்லப்பட்டன. மேலும் சிலர் பேனர்கள் யாருக்கும் தெரியாமல் மறைத்தும், சாய்த்தும் வைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து அங்கு போட்டி நடைபெற்றது. திமுக ஆட்சி நடக்கும் நிலையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒரு முன்னாள் அமைச்சரின் பேனர்கள் திருச்சியில் வைக்கப்பட்டிருந்தது திமுகவினரை கோபத்தில் உள்ளாக்கியதோடு அதிமுகவினரை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது.

போட்டி நடக்கும் நிலையில் அங்கு இரு அமைச்சர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவரது ஆதரவாளர்களோ கட்சி சார்பாக அவர்கள் வைக்கப்படவில்லை. இதனால் திமுகவினரையும் அமைச்சர் கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+