பிப்ரவரி 31 என்று தெரியாமல் கூறி விட்டேன்! எடப்பாடி,செல்லூர் ராஜுவை விடவா? அமைச்சர் கே.என்.நேரு கலகல
திருச்சி : மார்ச் 31 என்பதற்கு பதிலாக பிப்ரவரி 31 என்று தெரியாமல் கூறி விட்டேன் அதை இவ்வளவு பெரிது படுத்துகிறார்கள் என கூறியுள்ள அமைச்சர் கே.என்.நேரு, எடப்பாடி பழனிசாமி கம்ப ராமாயணத்தை எழுதியது சேக்கிழார் எனவும், வைகையை தெர்மாகோலில் மூடிய செல்லூர் ராஜு போன்றவர்கள் ஹார்டுவேர் பல்கலைக்கழகத்திலா பட்டம் பெற்றிருப்பார்கள் என கூறியுள்ளார்.
திருச்சி மதுரை நெடுஞ்சாலையில் பஞ்சப்பூரில் 350 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ள இடத்தை தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என் நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார் .
இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் கே.என்.நேரு
ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என் நேரு ," நேற்று முதல்வரிடம் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பது குறித்த விரிவான திட்ட அறிக்கையை காட்டினோம். டெண்டர் விடுவதற்கான பணிகள் விரைவில் துவங்கும் - 8 அடி உயரத்திற்கு 37 கோடி செலவில் மனலை நிரப்ப உள்ளோம் - இது முதல் கட்டம் 350 கோடி,இரண்டாவது மார்கெட்,பின்னர் வனிக வளாகம் இது போன்று நான்கு கட்டங்களாக இந்த பணிகள் நடைபெற உள்ளது.இந்த இடத்தில் 280 கடைகள் அமைக்க திட்டம் - 20 ஆயிரம் பேருக்கு இதன் வாயிலாக வேலை வாய்ப்பு ஏற்படுத்த உள்ளோம்.

முதல்வர் ஸ்டாலின்
மதுரை,திண்டுக்கல்,தஞ்சாவூர் உள்ளிட்ட அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளும் இணையும் இடமாக இது அமைகிறது. திண்டுக்கல் சாலை முதல் கம்மரசம்பேட்டை இணைப்பிற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது - அதற்கான பணிகள் துவங்கும். மனப்பாறை சிப்காட்டிற்கு ஒரு கூட்டு குடிநீர் செயல்படுத்த முதல்வர் ஒதுக்கி உள்ளார். பெருநகர வளர்ச்சி குழுமத்தில் திருச்சியை எப்படி முதல்வர் விட்டார் என்று தெரியவில்லை - எப்படியும் கேட்டு வாங்கி விடுவேன். முதல்வரிடம் இது குறித்து கலந்து பேசி கண்டிப்பாக திருச்சிக்கு கேட்டு வாங்கி விடுவோம்.

சொத்து வரி உயர்வு
கள்ளிக்குடி மார்க்கெட்டை காட்டுக்குள் வைத்தால் யார் வருவார்கள் ? மக்கள் அதிகம் வந்து செல்லும் இடத்தில் மார்கெட் இருந்தால் அனைவருக்கும் வசதியாக இருக்கும் சொத்து வரி உயர்வு குறித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி குற்றச்சாட்டு குறித்து பதிலளித்த அமைச்சர் நேரு, " 1987ல் 100, 200, 300,
1993ல் 100,150, 250 என்கிற அளவில் அதிமுக ஆட்சியில் வரியை உயர்த்தினார்கள் - ஆனால் நாம் தற்போது அப்படி எல்லாம் உயர்த்தவில்லை.

பிப்ரவரி 31 சர்ச்சை
இந்தியாவில் உள்ள 14 மாநிலங்களில் வரி உயர்வு ஏற்றிய பின்னர் தான் தமிழகத்தில் நாம் வரியை உயர்த்தினோம் - மற்ற மாநிலங்களை விட குறைவான வரி தமிழகத்தில் தான். மற்ற மாநிலம் நமக்கு முன்னர் வரியை ஏற்றி விட்டனர் - நாம் அதற்கு பின்னர் தான் ஏற்றினோம்,எனவே வேண்டும் என்றே குறை கூறும் அவர்களிடம் நாம் என்ன சொல்ல முடியும். மார்ச் 31 என்பதற்கு பதிலாக பிப்ரவரி 31 என்று தெரியாமல் கூறி விட்டேன் அதை இவ்வளவு பெரிது படுத்துகிறார்கள் - எடப்பாடி பழனிசாமி கம்ப ராமாயணத்தை எழுதியது சேக்கிழார் என்றார், வைகையை தர்மாகோலில் மூடிய செல்லூர் ராஜு போன்றவர்கள் ஹார்டுவேர் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருப்பார்கள்." என பேசினார்.












Click it and Unblock the Notifications