இன்னைக்கு போங்க.. திருச்சி நீதிமன்றத்தில் ஆஜரான அமைச்சர் கேஎன் நேரு.. நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு
திருச்சி: தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கில் நகராட்சி நிர்வாகத்துறை அமைசர் கேஎன் நேரு இன்று திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் நீதிபதி அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அமைச்சரவையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக இருப்பவர் கேஎன் நேரு. திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இவர் உள்ளார். இவருக்கு எதிராக பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

அதில் ஒன்று தான் 2016ல் தேர்தல் நன்னடத்தை மீறிய வழக்காகும். அதாவது கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி தேர்தல் நன்நடத்தை விதிமுறைகளை மீறி திமுக சார்பில் சென்ட்ரல் பஸ் நிலையம் அருகே பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
இதுதொடர்பான புகாரில் கன்டோன்மென்ட் அமைச்சர் கேஎன் நேரு, திருச்சியின் தற்போதைய மேயர் அன்பழகன் உள்பட திமுக நிர்வாகிகள் மீது மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதுதொடர்பாக வழக்கு திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் தான் வழக்கு தொடர்பாக நேரில் நீதிமன்றம் சார்பில் அமைச்சர் கேஎன் நேருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை தொடர்ந்து அமைச்சர் கேஎன் நேரு, மேயர் அன்பழகன் உள்பட 4 பேர் இன்று திருச்சி குற்றவியல் நீதிமன்றம் III-ல் நீதிபதி கேஆர் பாலாஜி முன்பு ஆஜராகினர். இதையடுத்து நீதிபதி கேஆர் பாலாஜி வழக்கு விசாரணையை 2024 ஜனவரி 11ம் தேதிக்கு ஒத்திவைத்ததோடு, அன்றைய தினமும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என அமைச்சர் கேஎன் நேரு உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டார்.
‛சரியும் ஆணவ சாம்ராஜ்யம்’.. திமுகவுக்கு சாபமிட்டு சபதமேற்ற தமிழிசை.. ஆக்ரோஷத்துக்கு காரணமான ட்ரோல்
இதையடுத்து அமைச்சர் கேஎன் நேரு நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்து புறப்பட்டு சென்றார். கேஎன் நேரு உள்ளிட்டோர் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானதால் திமுக வழக்கறிஞர்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானவர்கள் அங்கு குவித்தனர். இதனால் இன்று நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதேபோல் 2017 ல் நீட் தேர்வுக்கு எதிராக திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகில் திமுகவினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கில் எம்எல்ஏக்கள் சவுந்தர பாண்டியன், ஸ்டாலின் குமார், மேயர் அன்பழகன், கவுன்சிலர் ராமதாஸ் உள்ளிட்டோர் இன்று மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட்டனர். இவர்களும் இந்த வழக்கு தொடர்பாக ஜனவரி 11ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி ஆர்கே பாலாஜி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications