சேலம் திமுக இளைஞரணி மாநாடு! திருச்சியில் கவுண்ட் டவுன் ஸ்டார்ட் செய்து வைத்த உதயநிதி ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: வரும் டிசம்பர் 17ஆம் தேதி சேலத்தில் நடைபெறவுள்ள திமுக இளைஞரணி மாநாட்டை ஒட்டி அதற்கான கவுண்ட் டவுனை திருச்சியில் தொடங்கி வைத்திருக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

இன்னும் மாநாடுக்கு 110 நாட்கள் மட்டுமே இருப்பதால் அந்த எண்ணிக்கை டிஜிட்டல் போர்டில் டிஸ்பிளே ஆனது. திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஏற்பாட்டில் இந்த கவுண்ட் டவுன் போர்டு வைக்கப்பட்டுள்ளது.

Minister Udhayanidhi Stalin has started the countdown to the DMK Youth Conference to be held in Salem

திமுகவில் எத்தனையோ சார்பு அணிகள் இருந்தாலும் அதில் பிரதான அணியாக விளங்குவது இளைஞரணி மட்டுமே. ஸ்டாலின், வெள்ளக்கோவில் சாமிநாதன் ஆகிய இருவர் வசம் இருந்த திமுக இளைஞரணி இப்போது கடந்த 5ஆண்டுகளாக உதயநிதி ஸ்டாலின் வசம் உள்ளது.

நண்பர்களுடன் இணைந்து கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. என்ற அமைப்பைத் தொடங்கிய ஸ்டாலின் மாநகராட்சித் தேர்தல் பரப்புரை, ஊர் ஊராக பிரச்சார நாடகம் என கட்சிப்பணிகளில் மிகத் தீவிரம் காட்டினார். கட்சி வேலையில் ஸ்டாலினுக்கு இருந்த அதீத ஆர்வத்தை பார்த்து தான் திமுகவின் துணை அமைப்பாக 1980ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி மதுரை ஜான்சிராணி பூங்காவில் இளைஞரணி ஆரம்பிக்கப்பட்டது.

பேராசிரியர் அனபழகன் வைத்த நிதி திரட்டும் போட்டியில் மற்ற அணிகளுக்கு முன்பாக இளைஞரணி சார்பில் 11 லட்ச ரூபாய் நிதி திரட்டித் தந்த ஸ்டாலின், இளைஞரணிக்காக அன்பகம் என்ற அலுவலகத்தை போராடி வாதாடி பெற்றார்.

மேலும், திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் திறக்கப்பட்ட போதும் சரி, வி.பி.சிங் உள்ளிட்ட அகில இந்தியத் தலைவர்கள் பங்கேற்ற தேசிய முன்னணி தொடக்க விழாவின் போதும் சரி, இளைஞரணியின் வெண்சீருடை அணிவகுப்பு மூலம் தேசியளவில் கவனம் ஈர்த்தார் ஸ்டாலின்.

இதனிடையே கடந்த 2007ஆம் ஆண்டு திருநெல்வேலியில் திமுக இளைஞரணியின் முதல் மாநாட்டை நடத்தினார் ஸ்டாலின். இப்போது வரும் டிசம்பர் 17ஆம் தேதி திமுக இளைஞரணியின் 2வது மாநில மாநாடு நடைபெறவுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+