இது ஜெயலலிதா கட்சி.. 100 பெர்சன்ட் வெல்வோம்.. விட மாட்டோம்.. அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அதிரடி
உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வெல்வோம் என்று வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார்
Recommended Video
திருச்சி: "இது ஜெயலலிதாவின் அதிமுக. அப்போது போலவே இப்போதும் அதே வலிமையுடன் இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலில் 100 % வெல்வோம்" என்று தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறியுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தல் திருவிழா விரைவில் தொடங்கப் போகிறது. கிராமத்து திருவிழாக்களுக்கு வண்டி கட்டி மக்கள் ஆரவாரமாக கிளம்புவதைப் போல கூட்டணி என்ற வண்டியை சரி செய்ய ஆரம்பித்து விட்டன அரசியல் கட்சிகள்.
எல்லாக் கட்சிகளிலும் கூட்டணிப் பேச்சுக்கள், யார் யார் எங்கு போட்டியிடுவது என்ற பேச்சுக்கள் களை கட்டியுள்ளன. ஒவ்வொருவரும் உற்சாகமாக உள்ளனர். இப்படி எல்லோருமே உற்சாகமாக இருப்பது தமிழக அரசியல் வரலாற்றில் இதுதான் முதல் முறையாகும். (இவர்கள் அனைவரும் சேர்ந்து மக்களை உற்சாகமாக வைத்துக் கொண்டால் சரிதான்).

சுற்றுலா துறை அமைச்சர்
இந்த நிலையில் அமைச்சர்கள் உள்ளாட்சித் தேர்தலுக்காக தடபுடலாக தயாராகி வருகின்றனர். அந்த வகையில், திருச்சியைச் சேர்ந்த சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜனும், அதிமுக அபார வெற்றி பெறும் என்று பெரும் நம்பிக்கையுடன் கூறியுள்ளார். அரசு சார்பில் பொது மக்களைத் தேடிச்சென்று மனுக்களைப் பெறும் சிறப்பு நீதி முகாம் திருச்சியில் 503 இடங்களில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 1,050 பயனாளிகளுக்கு ரூ.1. 10 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வழங்கினார்.

ஜெயலலிதா ஆட்சி
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் நடராஜன். அப்போது அவர் கூறுகையில், "சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பெற்ற வெற்றியின் மூலம் அதிமுக மீண்டும் ஜெயலலிதா ஆட்சி காலத்திலிருந்தது போலவே, வலிமையான கட்சி என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ராணுவக் கட்டுப்பாடு மிக்க கட்சியாக உருவெடுத்து இருக்கிறது. எனவே வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக 100 விழுக்காடு வெற்றி பெறும். அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் தேவையில்லை.

2 ஆயிரம் ரூபாய்
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக நலிவடைந்த தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் திட்டம் கிடப்பில் போடப்படவில்லை. இந்த விவகாரம் முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது விரைவில் அரசு உறுதி அளித்தபடி 2 ஆயிரம் ரூபாய் நலிவடைந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் என்றார் நடராஜன்.

சுஜித்
சமீபத்தில் திருச்சி அருகே மணப்பாறையில், குழந்தை சுஜித் போர்வெல் குழியில் விழுந்து தவித்தபோது அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், விஜயபாஸ்கர், வளர்மதி ஆகியோர் அங்கேயே முகாமிட்டு மீட்புப் பணிகளை முடுக்கி விட்டனர் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications