நானே கேஸ் டீலர்.. சிலிண்டர் தட்டுப்பாடு பச்சை பொய்.. நயினார் நாகேந்திரன் தடாலடி

Subscribe to Oneindia Tamil

திருச்சி: ஈரான் - அமெரிக்கா இடையே ஏற்பட்டு வரும் போர் உலகம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஈரானில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. ஈரானில் இருந்து பிற நாடுகளுக்கு கச்சா எண்ணெய் கொண்டுசெல்லும் கடல் போக்குவரத்தும் முடக்கப்பட்டுள்ளது.

இதனால் சமையல் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உணவகங்கள் மூடல், உணவு பட்டியல் குறைப்பு நடவடிகைக்கள் எடுத்து வருகிறார்கள். இந்நிலையில் நானே ஒரு கேஸ் டீலர். சிலிண்டர் பற்றாக்குறை என்பது பொய் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

nainar-nagendran-i-am-a-gas-dealer-cylinder-shortage-is-fake-news-said-nainar-nagendran

சிலிண்டர் தட்டுப்பாடு

திருச்சியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் திருச்சியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "சிலிண்டர் தட்டுப்பாடு என்பது ஒரு பொய். இது முழுக்க முழுக்க முதலமைச்சர் சொன்ன பொய். களத்தில் இருந்து புகார் வருவதாக நீங்கள் சொல்வது பொய். கேஸ் சிலிண்டரை பொறுத்தவரை ஒரு நபருக்கு 20 நாட்களுக்கு பிறகு தான் புக் செய்ய முடியும். சிலிண்டர் வீட்டிற்கு வருவதற்கு 30 - 40 நாட்கள் கூட ஆகலாம். இதுதான் சர்வரில் உள்ள நடைமுறை.

இன்றைக்கு ஒரு சிலிண்டரை பெற்று கொண்டு உடனே புக் செய்தால் உங்களுக்கு கிடைக்காது. இந்த சிஸ்டமே இப்படித்தான் இயங்கும். ஏனென்றால் நான் கேஸ் டீலர். அதனால் தான் அப்படி சொல்கிறேன். சிலிண்டர் தட்டுப்பாடு எல்லாம் எங்குமே இல்லை. உங்களுக்கு 20 நாட்களுக்குள் சிலிண்டர் வேண்டுமா. நானே தருகிறேன். நீங்கள் எங்கு புக் செய்கிறீர்களோ அங்கு தருகிறேன்.

எதிர்க்கட்சியினர் எழுதி போட்டிருப்பார்கள்

ஹோட்டல்களில் உணவு பட்டியலை குறைத்தற்கும் சிலிண்டருக்கும் சம்பந்தமே கிடையாது. இப்படி எல்லாம் கேள்வி கேட்டால் உங்கள் கேள்வியில் அர்த்தம் இருக்கிறதா, என் கேள்வியில் அர்த்தம் இருக்கிறதா. ஹோட்டல்களில் உணவுப் பொருட்களுக்கு ஏற்கனவே இருந்த விலை என்ன. இப்போது குறைக்கப்பட்ட பெருட்களுக்கான விலை எவ்வளவு. இதை யோசித்து பாருங்கள்.

ஹோட்டலில் சிலிண்டர் தட்டுப்பாடு என்று எதிர்க்கட்சியினர் எழுதிப் போட்டிருப்பார்கள். 16 கிலோ சிலிண்டரை குறைந்த விலைக்கு ஹோட்டல்களில் மாற்றி மாற்றி விற்கிறார்கள். சிலிண்டர் திருட்டுக்காக சில சிஸ்டங்களை வைத்துள்ளனர். நிச்சயமாக சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை. நீங்கள் சென்னையில் எந்தப் பகுதி என்று சொல்லுங்கள். 20 நாட்களுக்குள் உங்களுக்கு சிலிண்டர் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்.

இந்தியாவுக்கு பாதிப்பு இல்லை

உலகத்தில் போர் நடந்து கொண்டிருக்கிறது. இதனால் இந்தியாவுக்கு பொருளாதார தட்டுப்பாடு இல்லை. மற்ற பகுதிகளில் எல்லாம் எண்ணெய் விலை கூடியுள்ளது. ஆனால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை" என்றார். நயினாரின் இந்தக் கருத்துக்கு ஹோட்டல் உரிமையாளர்கள், பொது மக்கள், எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+