கோட்டைக்கு வரும் புது மாப்பிள்ளை.. மணமகன் தேடும் இளம் பெண் அமைச்சர்.. ஜோதிடர்களுடன் தீவிர ஆலோசனை!
சென்னை: தமிழக அரசியலில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பல எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளன. விஜய் தலைமையிலான அரசு பதவி ஏற்று இளம் அமைச்சரவையும் ஆட்சி செய்து வருகிறது.
புதிய தலைமுறை இளம் தலைவர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்ட அமைச்சரவையில், ஒரு இளம் பெண் அமைச்சரின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் பெரும் கவனத்தை பெற்றுள்ளன. இந்த நிலையில், அவருக்கு விரைவில் திருமணம் நடைபெறவிருப்பதாக வெளியாகும் தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
முப்பது வயதை தாண்டி சில வயதே நிறைவு பெற்ற இந்த இளம் அமைச்சர், தேர்தல் பிரச்சாரத்தின்போது தனது துடிப்பான பேச்சு மற்றும் மக்கள் நலன் சார்ந்த அணுகுமுறையால் பெரும் கவனத்தை ஈர்த்தார். ஆட்சிப் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே முக்கியமான துறையின் பொறுப்பை வகித்து வரும் அவர், துறை ரீதியான ஆய்வுக் கூட்டங்கள், மக்கள் பிரச்சனைகளைத் தீர்க்கும் நடவடிக்கைகள் என தொடர்ச்சியான பணியாற்றி வருகிறார்.

இளம் வயதிலேயே அரசியல் அரங்கில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ள இவரது தனிப்பட்ட வாழ்க்கை இப்போது பொதுவெளியில் ஆர்வத்தை ஈர்க்கத் தொடங்கியுள்ளது.
அமைச்சரின் குடும்பத்தினர் திருமணத்துக்கான மாப்பிள்ளை தேடும் பணியில் முழு தீவிரத்துடன் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அரசியல் அதிகாரம், பதவி என அனைத்தும் இருந்தாலும், குடும்ப பாரம்பரியம் மற்றும் சமூக வழக்கங்களுக்கு முழு மதிப்பு கொடுத்து, தங்களது சமூகத்துக்குள் (Caste) தகுதியான வரனைத் தேர்வு செய்ய விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசியல் பின்னணி கொண்ட இளம் தலைவர்கள் மட்டுமின்றி, உயர் அரசு அதிகாரிகள் (IAS, IPS), தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் குடும்பங்களிலும் வரன் தேடல் நடைபெற்று வருவதாக அரசியல் வட்டாரங்கள் பகிர்ந்து கொள்கின்றன.
இந்த மாப்பிள்ளை வேட்டையில் பாரம்பரிய ஜோதிட நம்பிக்கையும் முக்கியப் பங்கு வகிக்கிறது. அமைச்சரின் குடும்பம் ஜோதிடத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருப்பதால், தமிழகத்தின் பிரபல ஜோதிடர்களில் ஒருவரிடம் ஜாதகம் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. தற்போது அமைச்சரின் ஜாதகம் ராஜயோக கட்டத்தில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், வரும் மாப்பிள்ளை அவரது அரசியல் வாழ்க்கைக்கு பக்கபலமாக இருக்கும் ஆளுமை கொண்டவராக இருக்க வேண்டும் என ஜோதிடர் அறிவுறுத்தியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. பல ஜாதகங்கள் ஆராயப்பட்டு வரும் இந்தச் சூழலில், பொருத்தம் சரியாக அமைந்தால் அடுத்த சில வாரங்களில் நிச்சயதார்த்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக கோட்டை வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன.
இது முழுக்க குடும்ப விவகாரம் என்றாலும், கட்சியின் முக்கிய இளம் முகமான இந்த அமைச்சரின் திருமண விவகாரம் தலைமைக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் தரப்பில் இருந்து சாதகமான வாழ்த்துகள் கிடைக்கும் என்றும், தகுந்த வரன் கிடைத்தவுடன் நேரில் ஆசி பெற குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. ஆட்சியில் இணைந்து சில மாதங்களிலேயே இத்தகைய மங்களகரமான செய்தி வெளியாவது கட்சித் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியலில் புதிய முகங்கள் அதிகரித்து வரும் இந்தக் காலகட்டத்தில், இளம் அமைச்சரின் தனிப்பட்ட வாழ்க்கை முடிவு அவரது அரசியல் பயணத்தை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. புது மாப்பிள்ளை யார் என்பது விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என அரசியல் ஆர்வலர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இந்தச் செய்தி தமிழக அரசியல் அரங்கில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
வேளச்சேரி ஷாக்.. பாட்டியுடன் சென்ற 4 வயது குழந்தை பட்டப்பகலில் காரில் கடத்தல்.. இறுதியில் ட்விஸ்ட்! -
'அமரன்' மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு பெருமை சேர்த்த சென்னை! பிரதான சாலைக்கு பெயர் சூட்டி அதிரடி! -
3 லட்சம் சதுரடி! வருது 13 மினி மால்.. சென்னை மெட்ரோ 2ம் கட்ட ஸ்டேஷன்களில் சுவாரசியம்! தரமான பிளானிங் -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
13 நாள் மனைவியுடன் கணவர் பேசாதது மனரீதியான கொடுமை அல்ல! கோவை இளைஞர் வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன?












Click it and Unblock the Notifications