திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அசத்தும் திருச்சி போலீஸ்.. புகார் அளித்தால்.. விசாரிக்கும் நடைமுறையில் புதிய மாற்றம்

Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சி மாநகரில் புகார் கொடுத்தால், புகார் கொடுத்தவரின் வீட்டிற்கே போலீஸார் நேரடியாக சென்று விசாரிக்கும் நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.,

திருச்சி மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் நேரடியாக, மற்றும் இணையவழியில் பெறப்படும் புகார்கள் அனைத்தையும் புகார்தாரரின் இல்லத்திற்கே நேரடியாக சென்று விசாரிக்கும் முறையை கடந்த அக்.3 ஆம் தேதி மாநகர காவல்துறை ஆணையா் ஜெ.லோகநாதன் அறிமுகப்படுத்தினார்.

 new method for police complaint and investigate in trichy

அதன்பேரில், செவ்வாய்க்கிழமை வரை சுமார் 180 மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அந்தந்த விசாரணை அதிகாரிகள், காவல்நிலைய ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரடியாகச் சென்று சிசிடிவி மாற்றியமைத்தல், குடும்ப பிரச்னை, இடப்பிரச்னை உள்ளிட்ட 164 மனுக்களின் மீதான விசாரணையை நடத்தி முடித்தனா்.

கொரோனா காலத்தில் இவ்வாறான விசாரணை பயனுள்ள முறையில் இருப்பதாக பொதுமக்களும், காவல்துறையினரும் தெரிவித்தனா்.

English summary
If a complaint is lodged in Trichy, the police will go directly to the complainant's house and investigate.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X