திருச்சியில் முகாமிட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் டீம்! இழுத்துப் போட்டு வேலை பார்க்கும் கு.ப.கிருஷ்ணன்!
திருச்சி: ஏப்ரல் 24ஆம் தேதி திருச்சியில் மாநாடு நடத்தும் ஓ.பன்னீர்செல்வம், அதற்கான பணிகளை முழுவீச்சில் கவனித்து வருகிறார்.
மாநாடு நடைபெற இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ளதால் ஓ.பன்னீர்செல்வம் டீமில் உள்ள முக்கியப் பிரமுகர்கள் பலரும் திருச்சியில் முகாமிட்டுள்ளனர்.
திருச்சியை சேர்ந்தவர் என்ற அடிப்படையில் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மாநாடு பணிகளை முன்னின்று கவனிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரோ சைலண்ட் மோடில் இருந்து வருகிறார்.

இதனிடையே மற்றொரு முன்னாள் அமைச்சரும், மூத்த நிர்வாகியுமான கு.ப.கிருஷ்ணன் தான் மாநாடு பணிகளை இழுத்துப் போட்டு கவனித்து வருகிறாராம்.
மாநாடு செலவுக்கான தொகையை வேறு வழியின்றி ஓ.பன்னீர்செல்வமே ஏற்றுக்கொண்டிருப்பதால் பசைக்கு ஒன்றும் பஞ்சமில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் மாநாட்டுக்கு கூட்டம் எந்தளவுக்கு கூடும் என்பதை நினைத்து தான் ஓ.பன்னீர்செல்வம் அவ்வப்போது ஜெர்க் ஆகிறாராம். மூத்த நிர்வாகியான வைத்திலிங்கம் டெல்டாவில் இருந்து மொத்தமாக ஆட்களை இறக்க நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகளை அட்வான்ஸ் புக்கிங் செய்து வைத்திருக்கிறாராம்.

அதேபோல் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆட்களை அழைத்து வருவதற்கான செலவை ஓ.பன்னீர்செல்வம் தான் கவனித்துக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. காரணம் ஓ.பன்னீர்செல்வத்தால் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்ட பலரிடமும் பொருளாதார வசதியில்லை என்பதேயாகும்.
மேலும், ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெய்பிரதீப் மாநாடு பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வருவதுடன் பசை விவகாரங்களையும் முழுமையாக நிர்வகித்து வருகிறாராம்.












Click it and Unblock the Notifications