பஞ்சாய் போன பஞ்சப்பூர்.. காசை கரியாக்கிய வியாபாரிகள்! பயன்பாட்டுக்கு எப்போது? வெளியான முக்கிய தகவல்!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சி மாவட்ட மக்கள் மிகுந்த ஆர்வத்தோடு எதிர்பார்த்து காத்திருந்த பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தின் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் கடந்த மே மாதம் 5ஆம் தேதி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ஆனாலும் அது இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை எனவும், ஒரு பேருந்து கூட அங்கு வருவதில்லை என மக்கள் புகார் கூறி வந்தனர். இந்நிலையில் பேருந்து நிலையம் முழுமையான செயல்பாட்டுக்கு எப்போது வரும் என்ற தகவலை சொல்லியிருக்கிறார் அமைச்சர் கேஎன் நேரு.

சென்னைக்கு அடுத்து தமிழகத்தின் மிக முக்கிய நகரம் என்றால் அது திருச்சி தான். திருச்சியின் முக்கியத்துவத்தை உணர்ந்துதான் பல மத்திய அரசு நிறுவனங்கள் அங்கு அமைக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக பெல், துப்பாக்கி தொழிற்சாலை ஆகியவை திருச்சியில் அமைந்திருக்கின்றன.

இருந்த போதும் பெரிய அளவிலான நிறுவனங்கள் அங்கு இல்லை. விவசாயமே பிரதான தொழிலாக இருக்கிறது. ஆனாலும் திருச்சி தமிழகத்தில் மையத்தில் இருக்கிறது. வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என அனைத்து மாவட்டங்களையும் இணைக்கும் முக்கிய புள்ளி திருச்சி தான்.

trichy panjapur bus stand

தென் மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் திருச்சி வழியாகத் தான் சென்னை செல்ல வேண்டும். அதேபோல ரயில் பயணமாக இருந்தாலும் திருச்சி தான் மைய புள்ளியாக இருக்கிறது. கடந்த சில தினங்களாகவே திருச்சியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில் நகருக்குள் இருக்கும் பேருந்து நிலையத்தை புறநகரில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் இடையே இருந்தது. காரணம் நகருக்குள் பேருந்துகள் வருவதாலும் பேருந்து நிலையம் மத்திய பகுதியில் அமைந்திருப்பதாலும் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும் சத்திரம் பேருந்து நிலையமும் நகருக்குள்ளே அமைந்திருப்பதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தனர் மக்கள். இதை அடுத்து நகருக்கு வெளியே பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில் திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு இணையாக பிரம்மாண்ட பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. சுமார் 400 கோடி ரூபாய் செலவில் பேருந்து நிலையம் அமைக்க பணிகள் தொடங்கியது. கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளாக இந்த பணிகள் தீவிரமாக நடந்து வந்தது.

இந்த ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்துக்கு அருகே தான் சரக்கு வாகன நிறுத்த முனையம், சோலார் மின் திட்டங்கள், டைடல் பார்க் ஆகியவை அமைய இருக்கிறது. பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில்ஏசி வசதி, சர்வீஸ் சென்டர், எஸ்லலேலேட்டர், லிஃப்ட், ஆம்னி பேருந்து நிறுத்தம், அரசு பேருந்து நிறுத்தம், உள்ளூர் பேருந்துகள் நிறுத்தம், பயணிகளுக்கான காத்திருப்பு அறைகள், ஓய்விடம், உணவகம், கழிவறை, 24 மணி நேர கண்காணிப்பு, உதவி மையங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிக, புல்வெளி, பூங்கா, நடைபாதை உள்ளிட்டவை அமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் கடந்த மே 9ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார். இதனால் தங்களின் நீண்ட கால எதிர்பார்ப்பு பூர்த்தி அடைந்ததால் பெரும் மகிழ்ச்சியில் இருந்தனர் திருச்சி மக்கள். ஆனாலும் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வரவில்லை. வெளியூரில் இருந்து வரும் பேருந்துகளும் புறநகர் பேருந்துகளும் ஏற்கனவே இயங்கி வந்த பேருந்து நிலையங்களிலேயே நிறுத்தப்பட்டு பயணிகள் ஏற இறங்க அனுமதிக்கப்பட்டனர்.

இதனால் பஞ்சப்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசித்த மக்கள் கடும் பாதிப்படைந்தனர். குறிப்பாக பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் புதிதாக கடைகள் அமைத்தவர்கள் கடும் நெருக்கடி ஏற்பட்டது. ஒரு பேருந்து கூட பேருந்து நிலையத்திற்கு வருவதில்லை எனவும், ஆயிரம் கணக்கில் முதலீடு செய்து கடும் நஷ்டத்தை சந்தித்ததாக குற்றம் சாட்டினர். இந்த நிலையில் பஞ்சப்பூர் பேருந்து நிலையம் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என கூறியிருக்கிறார் அமைச்சர் கேஎன் நேரு.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர்," திருச்சி பஞ்சபூரின் பேருந்து நிலையம் கட்டப்பட்டு இருக்கும் நிலையில் வரும் 16ம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். ஏற்கனவே அங்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருக்கும் நிலையில் பேருந்துகள் அங்கிருந்து இயக்கப்படும். மேலும் அதே நாளில் அங்கு புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் அனைத்து கடைகளும் இயங்க தொடங்கும். அதே நேரத்தில் நகருக்குள் இருக்கும் சத்திரம் மற்றும் மத்திய பேருந்து நிலையமும் செயல்பாட்டில் இருக்கும்.

விருப்பப்பட்டால் தனியார் பேருந்துகள் பஞ்சப்பூர் பேருந்து நிலையம் செல்லலாம். மக்கள் முழுமையாக பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை பயன்படுத்தும் போது தனியார் பேருந்துகளும் அங்கு வழக்கம் போல வந்து விடுவார்கள். ஆனால் அரசு பேருந்துகள் அனைத்தும் பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் இருந்து தான் இயக்கப்படும்" எனக் கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+