திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

26 அடியிலிருந்து 70 அடிக்கு போக விட்டுட்டோமே.. சுஜித் மீட்பில் தாமதம்.. ஆதங்கத்தை கொட்டும் மக்கள்!

சுஜித்தை மீட்க முடியாதா என்று பொதுமக்கள் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பி உள்ளனர்

Google Oneindia Tamil News

திருச்சி: 26 அடியில் இருந்தபோதே துரிதமாக மீட்க முடியாமல், 70 அடி ஆழத்துக்குள் சுஜித்தை போக விட்டுட்டோமே.. என்ன டெக்னாலஜி இது? அறிவியல் சாதனம் நம்மிடம் இல்லையா? என்று 2 வயது சுர்ஜித்தை மீட்க முடியாமல் திணறி வருவதற்கு மக்கள் ஆதங்கத்தைக் கொட்டி வருகின்றனர்.

மணப்பாறை நடுக்காட்டுபட்டி கிராமத்தில் நேற்று மாலை 5.40 மணிக்கு சுஜித் என்ற இரண்டு வயது குழந்தை தெரியாமல் தவறி விழுந்துவிட்டான்.

people tweet about to rescue 2 years old child sujith

இந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை தொடர்ந்து 14 மணி நேரமாக விடிய விடிய மீட்புப் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால், 27 அடியில் இருந்த சுஜித், 68 அடி ஆழத்திற்கு சென்று இருந்த நிலையில் இப்போது 70 அடிக்கு சென்று விட்டான். மூச்சுவிடுவதில் சிரமம் இருக்கக்கூடாது என்பதற்காக ஆக்ஸிஜன் தொடர்ந்த செலுத்தப்பட்டு வருகிறது. குழந்தையை எப்படியாவது மீட்க வேண்டும் என்று உலக மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இன்னொரு பக்கம் ட்விட்டரில் சுஜித் ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

people tweet about to rescue 2 years old child sujith

எனினும் மற்றொரு பக்கம், குழந்தையை இன்னுமா மீட்க முடியவில்லை என்ற கொந்தளிப்பு எழுந்துள்ளது. இது சம்பந்தமாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள கோரிக்கையில், "விண்வெளிக்குச் செயற்கைக்கோள்களை அனுப்பி நம் நாடு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிற செய்திகேட்டு பெருமைப்படுகிற அதே காலக்கட்டத்தில் ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் விழுந்து அதை மீட்கப் போராடி வருவது வெட்கித் தலைகுனிய வைக்கிறது.

இத்துயரங்கள் இனியும் தொடராது தடுக்க அரசு தகுந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைச் செய்ய முன்வர வேண்டும். ஆழ்துளைக் கிணறுகளைப் பயன்பாடுகள் முடிந்த பிறகு நிரந்தரமாக மூடியோ, பயன்பாடுகள் நிறைவுறாது இருப்பின் தற்காலிகமாக மூடியோ வைப்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதிசெய்ய வேண்டும். இனி இப்படியான கொடுமை நடக்க காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தேவை. குழந்தையை பாதுகாப்பாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

மண் கொட்டி.. சோளம் விதைத்து.. குழந்தை சுஜித் கிணற்றிற்குள் விழுந்தது எப்படி.. பதற வைக்கும் தகவல்கள்மண் கொட்டி.. சோளம் விதைத்து.. குழந்தை சுஜித் கிணற்றிற்குள் விழுந்தது எப்படி.. பதற வைக்கும் தகவல்கள்

அதேபோல பொதுமக்கள் தரப்பில் இருந்தும் குமுறல்கள் வெளிப்பட்டு வருகின்றன. 70 அடி ஆழத்தில் விழுந்த குழந்தையை மீட்க முடியாதா.. நம்மிடம் வசதி இல்லையா.. சாதாரண மக்களின் துயர் போக்கும் அறிவியல் நம்மிடம் இல்லையா.. ஆழ்கடலில் விழுந்த விமானத்தை தேடும் அறிவியல் இருக்கும்போது, 70 அடி ஆழத்தில் விழுந்த குழந்தையை மீட்க அறிவியல் இல்லையா.. என்ன டெக்னாலஜி இது? என்று ட்விட்டரில் கடுமையானஅதிருப்திகளையும், ஆவேசமான பதிவுகளையும் பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் அரசுத் தரப்பில் அத்தனை விதமான ஒத்துழைப்பும், உதவிகளும் நேற்று மாலை முதல் வழங்கப்பட்டு வருகின்றன. துரதிர்ஷ்டவசமாக சிறுவன் விழுந்த இடம், விழுந்துள்ள நிலை ஏடாகூடாகமாக இருந்ததால் உடனடியாக மீட்க இயலாமல் தாமதத்திற்கு வழி வகுத்து விட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
public tweet about to rescue 2 years old child sujith and world wide prayer is going on severely
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X