விஞ்ஞான ரீதியான ஊழல்.. ஒரே ஒரு குடும்பத்தின் ATM ஆக திமுக! திருச்சியில் கொந்தளித்த பிரதமர் மோடி!
திருச்சி: உலகின் முக்கிய நகரங்களில் இருந்து மதுரைக்கும், மதுரையில் இருந்து உலகின் முக்கிய நகரங்களுக்கும் இனி செல்ல முடியும். விவசாயிகளால் காலையில் பறிக்கப்படும் மல்லி அன்று மாலைக்குள் பாரீஸ், நியூயார்க்குக்கு கொண்டு செல்லப்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பிரதமர் மோடி கேரள சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு திருச்சி விமான நிலையத்திற்கு ஐந்து முப்பது மணிக்கு வந்தடைந்தார். விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை, எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்றனர். இதையடுத்து திருச்சி விமான நிலையத்திலிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் பஞ்சப்பூரில் நடைபெறும் அரசு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

இந்த விழாவில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், எல்.முருகன், மாநில அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் பிரம்மாண்டமாக நடைபெற்ற என்டிஏ பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசினார்.
அப்போது பேசிய அவர்," எல்லாரும் நலமுடன் இருக்க கடவுளை வேண்டுகிறேன். திருச்சி நகரில் மக்களின் மத்தியில் நான் இருப்பது பெருமையாக உள்ளது. திருச்சியில் உங்கள் முன்பு நான் இருப்பது மிகவும் அற்புதமான தருணம். வீரத்துக்கும் பெருமைக்கும் சொந்தமான மண் திருச்சி.. மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள்.. திமுக அரசை தூக்கி எறிய மக்கள் விரும்புகிறார்கள்.. என்.டி.ஏவால் மற்றுமே மாற்றத்தை கொண்டு வர முடியும் என மக்கள் நம்புகின்றனர்.
கடந்த முறை தமிழகம் வந்த போது திருச்சி ஸ்ரீரங்கத்தில் அழகு கொஞ்சும் தமிழில் கம்பராமாயணத்தை கேட்டு மகிழ்ந்தேன்.. தமிழ்நாட்டின் புதல்வர் சிபி ராதாகிருஷ்ணன் துணை குடியரசு தலைவர் ஆகியிருக்கிறார். திருச்சியில் புதிய விமான முனையம் அமைத்தோம்.. இப்போது மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தியுள்ளோம்.. மதுரையில் இருந்து உலக நாடுகளுக்கு இனி நேரடியாக போக முடியும்.. இதனால் மதுரையில் சுற்றுலா மேம்படும்.. உலகின் முக்கிய நகரங்களில் இருந்து மதுரைக்கும், மதுரையில் இருந்து உலகின் முக்கிய நகரங்களுக்கும் இனி செல்ல முடியும். விவசாயிகளால் காலையில் பறிக்கப்படும் மல்லி அன்று மாலைக்குள் பாரீஸ், நியூயார்க்கு கொண்டு செல்லப்படும்
2021 ஆம் ஆண்டில் திமுக அரசு அமைந்தது. திமுக ஆட்சியில் ஒரு குடும்பத்தில் இருந்து தொடங்கி ஒரே குடும்பத்தோடு முடிகின்றது. அமைச்சர்கள் மாறலாம்.. சட்டசபை மாறலாம். ஆனால் அதிகாரம் என்னவோ ஒரே குடும்பத்திடம் மட்டுமே இருக்கும். விஞ்ஞான ரீதியான ஊழல். இந்த மாதிரிக்கு பெயர் போனது தான் திமுக. இந்த மாதிரி தான் ஒரே ஒரு குடும்பத்தின் ஏடிஎம்-ஆக மாற்றியிருக்கிறது.
திருச்சியில் உள்ள ஒரு தலைவர் வேலைவாங்கி தருவதாக பெரிய மோசடியில் சிக்கியிருக்கிறார். வேலை பணத்திற்காக விற்கப்படும் போது ஒரு ஏழை மாணவரின் வாழ்க்கை கனவாக போகின்றது. இந்த பணம் எல்லாம் எங்கே போகிறது.. எப்படி அனைத்து ஆறுகளும் கடலில் சென்று சேர்கிறதோ அதேபோல தமிழத்தின் ஊழல் பணம் எல்லாம் ஒரு குடும்பத்தை சென்று சேர்கிறது. அதன் குடும்ப சொத்தாக ஆகின்றது. " என்றார்.












Click it and Unblock the Notifications