மழை, வெள்ளத்தால் தமிழக மக்கள் வலிகளை அனுபவித்தீர்கள்.. திருச்சியில் பிரதமர் மோடி வேதனை
திருச்சி: மழை, வெள்ளத்தால் தமிழக மக்கள் வலிகளை அனுபவித்தீர்கள் என திருச்சி விமான நிலைய திறப்பு விழாவில் பிரதமர் மோடி வேதனை தெரிவித்திருந்தார்.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய முனையம் திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அவர் பேசுகையில் விஜயகாந்தை நாம் இழந்துவிட்டோம். விஜயகாந்த் நிஜத்திலும் கேப்டன்தான். சிறந்த தேசியவாதியாக திகழ்ந்தார்.

சினிமாவிலும் அரசியலிலும் கேப்டனாக இருந்தவர் விஜயகாந்த், திரைப்படங்களில் அவரது செயல்பாடுகள் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார். அரசியல்வாதியாக தேசிய நலனில் அக்கறை கொண்டவர்.
அவருடைய குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மழை, வெள்ளம் காரணமாக தமிழக மக்கள் கடந்த ஆண்டு கடுமையான துயரத்தை அனுபவித்தீர்கள். அதிக வலியை அனுபவித்தீர்கள். இந்தத் துயரமான நேரத்தில் தமிழகத்திற்கு மத்திய அரசு உறுதுணையாக இருந்து வருகிறது.
25 ஆண்டுகள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும். வளர்ச்சி என்பது பொருளாதாரம் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றின் பிரதிபலிப்புதான் தமிழகம். இங்குதான் திருவள்ளுவர் உள்ளிட்டோர் சிறப்பான இலக்கியங்களை படைத்துள்ளார்கள். திருச்சி என்று சொன்னாலே எல்லா இடங்களிலும் சிறப்பான விஷயங்கள் கொட்டி கிடக்கின்றன.
தமிழகத்திற்கு நான் வரும் போதெல்லாம் புதிய சக்தி எனக்கு கிடைக்கிறது. எனக்கு ஏராளமான தமிழ் நண்பர்கள் உண்டு. அவர்களிடம் இருந்து தமிழ் கலாச்சாரத்தை நான் கற்றுக் கொள்கிறேன். நான் எங்கு சென்றாலும் தமிழகத்தின் கலாச்சாரம் குறித்து பேச மறப்பதில்லை. எனக்கு தமிழ்மொழி, தமிழ் கலாச்சாரம் குறித்து உற்சாகம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என மோடி பேசினார்.
-
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
திருச்சியில் பட்டப்பகலில் கொடூரம்.. 17 வயது பெண்ணை காரில் கடத்தி பலாத்காரம்.. போலீஸ் தீவிர வலைவீச்சு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்












Click it and Unblock the Notifications