சுஜித்தை மீட்க என்ன வழி என்பதே அனைவரின் எண்ணமும்.. குறை கூற இது நேரமல்ல.. பொன். ராதாகிருஷ்ணன்
அதிகாரிகளின் மீட்பு பணி பாராட்டத்தக்கது என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்
Recommended Video
மணப்பாறை: "தன் வீட்டு துயரத்தைபோல நினைத்து அனைத்து ஊழியர்களும் செயல்பட்டு வருகிறார்கள்.. சுர்ஜித்தை புதிய புதிய வழிகளில் மீட்கும் பணிகள் நடைபெறுகிறது.. அனைவரின் உணர்வும் குழந்தைமேல் குவிந்துள்ளது" என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
குழந்தை சுஜித் விழுந்து 4நாள் ஆன நிலையில், 71 மணி நேரத்தை கடந்தும் மீட்பு பணி நடந்து வருகிறது. சம்பவ இடத்தில் தமிழக அமைச்சர்கள் முகாமிட்டுள்ளனர்.

2-வது முறையாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வந்து,மீட்பு பணிகளை பார்வையிட்டு சென்றார். தமாகா தலைவர் ஜிகே வாசன் உள்ளிட்டோர் வந்து போன நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் நடுக்காட்டுப்பட்டிக்கு வந்தனர்.
அங்கு என்ன மாதிரியான மீட்பு பணிகள் நடக்கின்றன என்பது குறித்து கேட்டறிந்தனர். பின்னர் நடுக்காட்டுப்பட்டியில் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசும்போது சொன்னதாவது :
"குழந்தையை மீட்கும் விவகாரத்தில் அதிகாரிகளின் பணி உண்மையிலேயே பாராட்டத்தக்கது. சுர்ஜித்தை மீட்க மத்திய அரசு முழு ஒத்துழைப்பு தருகிறது. ஊழியர்கள் அனைவரும் தன் வீட்டு துயரத்தைபோல நினைத்து செயல்படுகிறார்கள். எந்தவித பேதமுமின்றி அனைவரின் உணர்வும் ஒன்றுபட்டுள்ளது.
அனைவரின் உணர்வும் குழந்தையின் மீது குவிந்துள்ளது. யார் என்ன செய்தார்கள், செய்யவில்லை என்பதை பற்றி பேசக்கூடிய தருணம் இது இல்லை.. குறைகளை பற்றி பேசாமல் நம்மால் என்ன உதவ முடியும் என நினைப்பதே சரியாக இருக்கும்.
ஏன் என்றால், தமிழக அமைச்சர்கள் மீட்பு பணியை கண்காணித்து வருகின்றனர். புது புது வழிகளில் குழந்தையை மீட்கும் பணி நடந்து வருகிறது. நல்ல முறையில் குழந்தை மீட்கப்படும் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications