ராமஜெயம் கொலை..திருச்சியில் ஒன்று கூடிய 5 ரவுடிகள்..உண்மை கண்டறியும் சோதனை எப்போது?

Subscribe to Oneindia Tamil

திருச்சி: ராமஜெயம் கொலை வழக்கு விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்படும் 12 பேருக்கும் முழு உடல் தகுதி மருத்துவ பரிசோதனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. உண்மை கண்டறியும் சோதனை எப்போது நடத்தி முடிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தி.மு.க. முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பியும் தொழிலதிபருமான கே.என்.ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் தேதி அதிகாலை நடைபயிற்சிக்கு சென்றார்.

அப்போது அவர் மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். காவல்துறையினர் அவரை தேடி வந்த நிலையில் கல்லணை ரோடு திருவளர்ச்சோலை பகுதியில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. முள் கம்பிகளால் கை கால்கள் கட்டப்பட்டு வாயில் அழுக்குத்துணி திணிக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார் ராமஜெயம்.

 ராமஜெயம் கொலை

ராமஜெயம் கொலை

ராமஜெயத்தை கொன்றது யார்? எதற்காக இந்த கொடூர கொலை நடந்தது என முதலில் உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தினர். எந்த துப்பும் கிடைக்காத நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் எந்தவித துப்பும் துலங்கவில்லை.

சி.பி.சி.ஐ.டி.யின் சிறப்பு புலனாய்வு குழு

சி.பி.சி.ஐ.டி.யின் சிறப்பு புலனாய்வு குழு

இதனையடுத்து வழக்கு விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. பத்து ஆண்டுகளாக கொலையாளிகளை கண்டு பிடிக்க முடியாத நிலையில் தற்போது சி.பி.சி.ஐ.டி.யின் சிறப்பு புலனாய்வு குழுவினர் கடந்த 6 மாதமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

13 பேர் அடையாளம்

13 பேர் அடையாளம்

இந்த வழக்கில் இதுவரை 700 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதில் சந்தேகப்படும்படியான 13 பேரை அடையாளம் கண்டு அவர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்கு வலுவான ஆதாரங்கள் இருப்பதாக சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் உறுதிபட தெரிவித்துள்ளனர்.

முகாமிட்ட ரவுடிகள்

முகாமிட்ட ரவுடிகள்

இதுதொடர்பாக பேசிய அதிகாரிகள் ராமஜெயம் கொலை செய்யப்பட்ட நாளுக்கு முந்தைய தினம் திருச்சி தில்லை நகர் பகுதியில் மேற்கண்ட 13 பேரில் 5 பேரின் செல்போன் பயன்பாடு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. அது மட்டும் அல்லாமல் கொலை நடப்பதற்கு மூன்று தினங்களுக்கு முன்பு காரைக்காலில் அவர்கள் சந்தித்து பேசிய ஆதாரங்களும் கிடைத்திருக்கின்றன.

உண்மை கண்டறியும் சோதனை

உண்மை கண்டறியும் சோதனை

இந்த நபர்களுக்கு ஜாபர் என்பவரது கொலை வழக்கிலும் தொடர்புள்ளது. எனவேதான் ராமஜெயம் கொலை வழக்கிலும் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கின்றோம். மேலும் இந்த 5 பேருடன் மற்ற 8 பேருக்கும் தொடர்பு இருக்கின்றது. அந்த அடிப்படையில் தான் 13 பேருக்கும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்துள்ளோம்.

துப்பு துலங்குமா?

துப்பு துலங்குமா?

இதில் கண்டிப்பாக துப்பு துலங்கும் என எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்துள்ளனர். இந்த 13 பேரில் சண்முகம் என்பவர் மட்டும் உண்மை கண்டறியும் சோதனைக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். ஆகவே வேறு வகையில் அவரிடம் விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

நீதிபதி தீர்ப்பு

நீதிபதி தீர்ப்பு

உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்படும் 12 பேருக்கும் முழு உடல் தகுதி மருத்துவ பரிசோதனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து இன்று அறிக்கையுடன் திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 6ல் ஆஜர்படுத்துகிறார்கள். நீதிபதி உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி அளித்து தீர்ப்பு கூறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+