அதிமுகவின் பவர் சென்டராக திகழ்ந்த ராவணன் மறைவு.. கொங்கு கோட்டை.. முதல்வர் ரேஸ் வரை போன பின்னணி!

Subscribe to Oneindia Tamil

திருச்சி : சசிகலாவின் நெருங்கிய உறவினரும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலாவுக்கு அரசியல் ஆலோசகராக செயல்பட்டவருமான ராவணன் காலமானார்.

சசிகலாவின் சித்தப்பா டாக்டர் கருணாகரனின் மருமகனான ராவணன் கோவையில் குடும்பத்தினருடன் வசித்து, அங்கு பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வந்தார்.

ஒருகாலத்தில், கொங்கு மண்டலத்தில் நிர்வாகிகள் நியமனம், வேட்பாளர் தேர்வு ஆகியவற்றில் ராவணனின் சொல்லே சபையேறும் என்ற நிலை இருந்தது.

அந்த காலகட்டத்தில் தான் கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டையாக மாறியது. கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த இன்றைய எடப்பாடி பழனிசாமி, வேலுமணி ஆகியோரின் வளர்ச்சியிலும் முக்கியப் பங்காற்றியவர் ராவணன் என்றே சொல்லலாம்.

 ராவணன் மறைவு

ராவணன் மறைவு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகிலுள்ள ராதாநரசிம்மபுரத்தைச் சேர்ந்தவர் ராவணன் (64). சசிகலாவின் சித்தப்பா டாக்டர் கருணாகரனின் மருமகனான ராவணன், கோவையில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். அங்கு பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வந்தார். சில காலமாக தனது மகனுடன் திருச்சியில் வசித்து வந்த நிலையில், ராவணன் நெஞ்சு வலி ஏற்பட்டு சிகிச்சை பலனின்று நேற்று மாலை காலமானார்.

பவர் சென்டர்

பவர் சென்டர்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகராக செயல்பட்டவர் ராவணன். சசிகலா அதிமுகவில் முக்கிய முடிவுகளை எடுத்ததற்குப் பின்னணியில் செயல்பட்டது இவர்தான் எனக் கூறப்படுவது உண்டு. கோவையில் கோலோச்சிய ராவணன் தான் ஒருகாலத்தில் கொங்கு மண்டலத்தில் அதிமுக நிர்வாகிகள் நியமனம், வேட்பாளர் தேர்வு என அனைத்திலும் முக்கிய பங்காற்றியவர்.

எடப்பாடி, வேலுமணி

எடப்பாடி, வேலுமணி

கொங்கு மண்டலத்தில் ராவணனின் கண்ணசைவு தான் ஜெயலலிதாவின் அறிவிப்பாக வெளிவரும். உள்ளாட்சித் தேர்தல் தொடங்கி, எம்.எல்.ஏ, எம்.பி சீட், மாவட்ட செயலாளர் நியமனம் வரை ராவணனின் ஆதிக்கம் இருந்தது. இப்போது அதிமுகவை தன் வசப்படுத்த முயற்சித்து வரும் எடப்பாடி பழனிசாமி, அவரது சகாக்களான வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோரின் வளர்ச்சியிலும் முக்கியப் பங்காற்றியவர் ராவணன்.

முதல்வர் வாய்ப்பு?

முதல்வர் வாய்ப்பு?

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை சென்றால் யாரை முதல்வர் ஆக்குவது என்ற கேள்வி எழுந்தபோது ராவணனை முதல்வர் ஆக்கலாம் என்று சசிகலா குடும்பம் முடிவு செய்திருந்ததாகவும் அப்போது செய்திகள் கசிந்தன. அதன் பிறகு சசிகலா குடும்பத்தினர் மீது பல்வேறு புகார்கள் வந்து பலரும் கைதான நிலையில், ராவணனும் ஒப்பந்ததாரரை மிரட்டி பணம் பறித்தது உள்ளிட்ட வழக்குகளில் கைதானார்.

வேலுமணிக்கு நெருக்கம்

வேலுமணிக்கு நெருக்கம்

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி, ஆரம்ப காலம் முதலே ராவணனுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர். அவர் கோவையில் ஆதிக்கம் செலுத்துவதற்கும் பின்னணியில் இருந்தது ராவணன் தான். சசிகலா குடும்பத்தினர் மீது ஜெயலலிதா அப்செட்டாகிய போது, ராவணனுடன் நெருக்கமாக இருந்த வேலுமணியின் அமைச்சர் பதவியும் பறிபோனது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+