நாள் முழுக்க உடன் இருந்தார்.. சுஜித் உடலை பார்த்து உடைந்து அழுத எம்பி ஜோதிமணி.. உருக்கம்!
குழந்தை சுஜித் உடலை பார்த்து காங்கிரஸ் எம்பி ஜோதிமணி உடைந்து கண்ணீர்விட்டு அழுதார்.
Recommended Video
திருச்சி: குழந்தை சுஜித் உடலை பார்த்து காங்கிரஸ் எம்பி ஜோதிமணி உடைந்து கண்ணீர்விட்டு அழுதார்.
குழந்தை சுஜித்தை மீட்பதற்காக 80 மணி நேரம் நடந்த போராட்டம் தோல்வியில் முடிந்துவிட்டது. 88 அடி ஆழத்தில் இருந்து நேற்று இரவு சுஜித் சடலமாக மீட்கப்பட்டார்.
அவரின் உடலில் இருந்து துர்நாற்றம் வந்ததை அடுத்து, சுஜித் உடல் ஆழ்துளை கிணற்றில் இருந்து தேசிய மீட்பு படை மூலம் வெளியே எடுக்கப்பட்டது. அவரின் கிராமத்திலேயே தற்போது சுஜித் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஆறுதலாக இருந்தார்
இந்த மீட்பு பணிகள் நடக்கும் போது, காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சுஜித்தின் அம்மாவுடன் நாள் முழுக்க உடன் இருந்தார். எல்லோரும் மீட்பு பணியில் கவனம் செலுத்தினார்கள். இதனால் சுஜித்தின் அம்மாவை சரியாக கவனிக்க யாரும் இல்லாத நிலை ஏற்பட்டது.

அம்மாவுடன் இருந்தார்
இதையடுத்து எம்பி ஜோதிமணி, சுஜித் அம்மாவுடன் இருந்து அவரை பார்த்துக் கொண்டார். அதேபோல் ஜோதிமணிதான் பாறைகளை குடைவதற்கு ரிக் மிஷினை பயன்படுத்துவதற்கு பதில், போர்வெல் போடுவதே சரியானது என்று ஐடியா கொடுத்தார். நேற்று பாறைகளை உடைக்க போர்வெல் இயந்திரம் பெரிய அளவில் பலன் அளித்தது.

பாறைகள் உடைப்பு
இதன் மூலம்தான் எளிதாக பாறைகள் உடைக்கப்பட்டு 65 அடி வரை தோண்டப்பட்டது. மீட்பு பணியை 2 நாட்கள் அங்கேயே இருந்து ஜோதிமணி கவனித்துக் கொண்டார். கட்சி பாகுபாடு பாராது அமைச்சர் விஜயபாஸ்கர் உடன் இணைந்து ஜோதிமணி தீவிரமாக பணியாற்றினார்.

அழுதார்
நேற்று இரவு சுஜித் உடல் மீட்கப்பட்ட போதும் கூட, ஜோதிமணி அங்குதான் இருந்தார். சுஜித் இறந்த செய்தி கேட்டு அங்கேயே நேற்று ஜோதிமணி உடைந்து அழுதுள்ளார். சுஜித்தை அம்மாவை தோளில் சாய்ந்து ஜோதிமணி ஆறுதல் கூறினார்.
-
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications