எடப்பாடியாருக்கு கீழ் இருக்க விரும்பினால் ஓபிஎஸ் அதிமுகவில் இருக்கட்டும்.. மாஜி அமைச்சர் தடாலடி

Subscribe to Oneindia Tamil

திருச்சி: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் நிச்சயம் பாஜகவில் இணைவார் என முன்னாள் அமைச்சர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

திருச்சியில் முன்னாள் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையின் அமைச்சர் எஸ் வளர்மதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் திமுகவை எதிர்க்கும் வல்லமை எடப்பாடி பழனிச்சாமிக்கு மட்டுமே இருக்கிறது. தொண்ணூற்று ஒன்பது சதவீத தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் இருக்கிறார்கள்.

எம்ஜிஆர் அவர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம், ஜெயலலிதா அவர்களால் வழிநடத்தப்பட்ட இயக்கம், இந்த இயக்கத்தை யாராலும் எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது. திருச்சியில் அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ். வளர்மதி செவ்வாய்க்கிழமை காலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

1972 இல் அதிமுக தோற்றம்

1972 இல் அதிமுக தோற்றம்

அப்போது அவர் மேலும் பேசுகையில்: 1972 ல் அதிமுகவை எம்ஜிஆர் தோற்றுவித்தார். அந்த இயக்கத்தை ஜெயலலிதா வலுவோடும் பொலிவோடும் வழிநடத்திச் சென்றார். அதற்குப் பின்னர் எடப்பாடி கே பழனிச்சாமி இந்த இயக்கத்தையும் ஆட்சியும் சிறப்பாக நடத்தினார். மீண்டும் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்ட போது எடப்பாடி பழனிச்சாமி மீட்டெடுத்தார்.

திமுகவுக்கு பாராட்டு

திமுகவுக்கு பாராட்டு

தமிழகத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருக்கும் ஓ. பன்னீர்செல்வம் சட்டமன்றத்தில் கருணாநிதி மற்றும் திமுக அமைச்சர்களை பாராட்டி பேசியது தொண்டர்களுக்கு வேதனை அளிப்பதாக உள்ளது. தொகுதி பக்கம் செல்லாமல் இருக்கும் அவரது மகன் ரவீந்திரநாத் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சந்தித்துப் பேசுகிறார்.

திமுகவுடன் தந்தை மகன் உறவு

திமுகவுடன் தந்தை மகன் உறவு

ஆகவே திமுகவுடன் தந்தை மகனுக்கு உறவு இருப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம். இந்த இயக்கத்தை பிளவுப்படுத்த நினைக்கிறார்கள்.எந்த கொம்பனாலும் அதிமுகவை பிளவுபடுத்த முடியாது. எடப்பாடி கே பழனிச்சாமி தலைமையில் ஒற்றை தலைமை இருந்தால் மட்டுமே மீண்டும் அதிமுகவை ஆட்சிக்கு கொண்டு வர முடியும். ஓ பன்னீர்செல்வம் தலைமையில் இன்னொரு இயக்கம் பிறக்க வாய்ப்பு இல்லை. அவர் பாஜகவுடன் சேர்ந்து விடுவார்.

எம்ஜிஆர்

எம்ஜிஆர்

இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம் தமிழ்நாட்டிலிருந்து திமுகவையும் அப்புறப்படுத்த வேண்டும் என்பதற்காகவே உருவாக்கப்பட்டது ஆகும். எம்ஜிஆருக்கு பிறகு இந்த இயக்கத்தை திறமையுடனும், வலிமையுடனும் மக்களுக்கு நல்லாட்சியை வழங்கியவர் ஜெயலலிதா ஆவார். அவருக்கு பிறகு இந்த இயக்கம் அழிந்துவிடும், ஒழிந்துவிடும் என்று நினைத்தவருக்கு எல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் அளவிற்கு எடப்பாடி பழனிசாமி சிறப்பான ஆட்சியை கடந்த 4 ஆண்டுகாலமாக வழங்கினார்.

இரட்டை இலை சின்னம்

இரட்டை இலை சின்னம்

முதலில் அதிமுகவின் சின்னத்தை முடக்க நினைத்தவர்களை எதிர்த்து போராடி மீண்டும் சின்னத்தை மீட்டெடுத்தவர் ஜெயலலிதா ஆவார். அதன் பிறகு மீண்டும் கட்சி சின்னத்தை முடக்கியபோது அவற்றை மீட்டெடுத்த பெருமை எடப்பாடி பழனிசாமியையே சேரும். மேலும் ஓ. பன்னீர்செல்வம் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவராகவும் இருக்கிறார்.

 திமுகவுடன் உறவு

திமுகவுடன் உறவு

இந்நிலையில் சட்டப்பேரவையில் திமுக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்களை பாராட்டி பேசி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவருடைய மகன், ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசி இருக்கிறார். அதிமுகவின் கொள்கைப்படி திமுகவிடம் யார் உறவு வைத்துக் கொண்டாலும் அவர்களை உடனடியாக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்பது தான்.

அதிமுக தோல்வி

அதிமுக தோல்வி

கடந்த தேர்தல்களில் அதிமுக தோல்வியை தழுவியதற்கு முக்கிய காரணம் இரட்டைத் தலைமைதான். ஆகையால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஒற்றைத் தலைமையை ஏற்று வெற்றி பெற வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம் ஆகும். தமிழகத்தில் திமுகவை எதிர்த்து வலிமையாக கட்சியை வழிநடத்த வேண்டும் என்றால் அதற்கு ஒரே தலைமை எடப்பாடி பழனிசாமிதான். ஆகையால் அவர் ஒற்றைத் தலைமையேற்று கட்சியை சிறப்பாக வழிநடத்த வேண்டும் என்பதே தொண்டர்களின் எண்ணம் விருப்பமாக உள்ளது.

பாஜகவில் இணைவார்

பாஜகவில் இணைவார்

ஓ. பன்னீர்செல்வத்தை அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க வேண்டும் என்றால் அதற்கு பொதுக்குழு உறுப்பினர் தான் முடிவு செய்ய வேண்டும். ஓ பன்னீர்செல்வம் நிச்சயமாக பாஜகவில் இணைவார். யார் மக்களுக்கு நல்லது செய்வார், யாருக்கு மக்களுடைய ஆதரவு இருக்கிறதோ அவர்களுக்குதான் பிரதமர் நரேந்திர மோடி ஆதரவு தருவார். ஓ பன்னீர்செல்வம் அதிமுக கட்சியை பிளவுபடுத்த நினைக்கிறார். அதிமுகவின் ஒற்றைத் தலைமையை எடப்பாடி பழனிசாமி ஏற்ற பிறகு அவருக்கு கீழ் பணிபுரிய விரும்பினால் ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்வோம்.

சுற்றுப்பயணம்

சுற்றுப்பயணம்

ஓ பன்னீர்செல்வம் மற்றும் சசிகலாவின் சுற்றுப்பயணம் எந்த விதத்திலும் எங்களை பாதிக்காது‌. திமுகவை எதிர்க்கும் வல்லமை எடப்பாடி பழனிச்சாமிக்கு மட்டுமே இருக்கிறது. தொண்ணூற்று ஒன்பது சதவீத தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் இருக்கிறார்கள். டிடிவி தினகரன் அதிமுக பற்றி பேச எந்த அருகதையும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+