ரிக் மிஷினால் ஏற்பட்ட அழுத்தம்.. சுஜித் மீது சுமார் 1 அடி அளவுக்கு மண் சரிவு.. பின்னடைவு!
ஆழ்துளை கிணற்றில் சிக்கி இருக்கும் சுஜித் மீது சுமார் 1 அடி அளவிற்கு மண் சரிவு ஏற்பட்டு இருக்கிறது என்று மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
திருச்சி: ஆழ்துளை கிணற்றில் சிக்கி இருக்கும் சுஜித் மீது சுமார் 1 அடி அளவிற்கு மண் சரிவு ஏற்பட்டு இருக்கிறது என்று மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சிறுவன் சுஜித்தை எப்போது மீட்பார்கள் என்று தமிழகமே தற்போது காத்துக் கொண்டு இருக்கிறது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி, சேர்ந்த சுஜித் என்ற சிறுவன் கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்துவிட்டார்.
வெள்ளிக்கிழமை மாலை இவரை மீட்கும் பணிகள் துவங்கியது. 69 மணி நேரமாக மீட்பு பணிகள் நடந்தும், இன்னும் சுஜித் மீட்கப்படவில்லை. சுஜித் இருக்கும் குழிக்கு அருகில் தற்போது இன்னொரு குழி தோண்டப்பட்டு வருகிறது.

மண் விழுந்தது
சிறுவன் சுஜித் மீது சுமார் அடி அளவிற்கு மண் விழுந்துள்ளது. தற்போது சுஜித் 88 அடி ஆழத்திற்கு கீழே இருக்கிறார். இந்த நிலையில் அவரின் தலைக்கு மேலே 1 அடி அளவிற்கு மண் விழுந்துள்ளது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்

முன்பு எப்படி
இதற்கு முன், இன்று காலை சுஜித் மீது 2 இன்ச் அளவில் சுஜித்தின் மேலே மண் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மண் அதிகமாக சிறுவன் மீது விழுந்து வருகிறது. அதனால் சிறுவன் எப்படி இருக்கிறார் என்பதை கணிக்க முடியவில்லை என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.

எதனால் இப்படி
சுஜித் இருக்கும் துளைக்கு அருகிலேயே இன்னொரு குழி தோண்டப்படுகிறது. இதனால் சுஜித் இருக்கும் ஆழ்துளை கிணற்றில் அதிகமாக அதிர்வு ஏற்படுகிறது. இந்த அதிர்வு காரணமாக சுஜித் தலை மீது மண் விழுந்து வருகிறது.

வேகம் எடுக்கும்
சுஜித் ஆழ்துளை கிணற்றில் சிக்கி 70 மணி நேரம் ஆகிவிட்டது. இதனால் எவ்வளவு விரைவாக மீட்க முடியுமோ அவ்வளவு விரைவாக மீட்க வேண்டும். அப்போதுதான் சுஜித்திற்கு அவசர சிகிச்சை அளிக்க முடியும். இன்று இரவிற்குள் சுஜித் மீட்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications