மன்னார்குடியில கேட்டாக.. மாயவரத்துல கேட்டாக.. கூட்டணி ரகசிய சந்திப்புகளை சொல்ல முடியாது : சீமான்
திருச்சி: என்னைய மன்னார்குடியில கேட்டாக, மாயவரத்துல கேட்டாக என கூவிக் கூவி வியாபாரம் செய்யும் வேலையா? எனக் கேள்வி எழுப்பினார் சீமான்.
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் அனல் பறக்கத் தொடங்கிவிட்டது. கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி தொகுதி பங்கீடு வரை தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றன. திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வரும் சூழலில் நாம் தமிழர் கட்சி தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும், புதுச்சேரியிலும் தனித்துப் போட்டியிட உள்ளதாக அறிவித்துவிட்டது.

தமிழ்நாட்டில் 31 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களையே அறிவித்துவிட்டார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். விரைவில் அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்களை பொதுக்கூட்ட மேடையில் நிறுத்தி மக்களுக்கு அறிமுகப்படுத்த இருக்கிறார் சீமான்.
வேட்பாளர்கள் பெயருடன், கரும்பு விவசாயி சின்னத்திற்கு ஓட்டு கேட்டு, நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை நாம் தமிழர் கட்சி தொடங்கிவிட்டது. ஆனால், நாதகவுக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைப்பதே கேள்விக்குறி என்ற நிலை உள்ளது. கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்கியதா என்ற கட்சிக்கு தேர்தல் ஆணையம் கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கியுள்ளது.
நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனக் கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகுவிடமும் நாம் தமிழர் கட்சியினர் மனு அளித்துள்ளனர். கரும்பு விவசாயி சின்னம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் போஸ்டர்களை அடித்து ஒட்டி வருகின்றனர் நாதகவினர்.
இந்நிலையில், இன்று இடும்பாவனத்தில் நடைபெறும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இதற்காக சென்னையில் இருந்து திருச்சி சென்ற அவர், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது சீமானிடம், கூட்டணிக்கு கட்சிகளிடத்தில் அழைப்பு வந்ததா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்துப் பேசிய சீமான், “அழைப்பு வராமல் என்ன செய்யும்? பொது மேடையிலும் அழைப்பார்கள். தனிப்பட்ட முறையிலும் சந்தித்து கூட்டணிக்கு அழைப்பார்கள். ரகசியமாக வந்து சந்திப்பதை பொதுவில் வெளியிடுவது மாண்பு அல்ல.
ரகசியமாக நடந்த சந்திப்புகளை இவர்கள் வந்து பேசினார்கள், அவர்கள் வந்து பேசினார்கள் என்று சொல்வது நாகரீகம் இல்லை. என்னைய மன்னார்குடியில கேட்டாக, மாயவரத்துல கேட்டாக, மயிலாப்பூர்ல கேட்டாக.. என கூவிக் கூவி வியாபாரம் செய்யும் வேலையா?” எனக் கேள்வி எழுப்பினார் சீமான்.
மேலும், “மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும். ஆனால், நான் போட்டியிடப் போவதில்லை. நான் இந்த மண்ணுக்கும் மக்களுக்குமான ஆள். எனது கட்சிப் பிரதிநிதிகள் டெல்லிக்குச் செல்வார்கள்” என்றும் தெரிவித்தார் சீமான்.
தொடர்ந்து பேசிய சீமான், “அரை நூற்றாண்டுகளாக இந்தியாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், இப்போது சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த கோரிக்கை வைப்பது ஏன்? இவ்வளவு நாள் கோமாவில் இருந்தார்களா?” எனக் காட்டமாகப் பேசினார் சீமான்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications