10 பக்கம் படிச்சாலே தூக்கம் வருது.. எப்படி படிக்கிறீங்க.. ரஜினி என்னிடம் கேட்டார்.. சீமான் சொன்ன கதை
திருச்சி: நடிகர் ரஜினிகாந்த் உடனான சந்திப்பு குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி இருக்கிறார். புத்தகம் படிக்கும் போது 10 பக்கம் படித்தாலே தூக்கம் வருவதாக ரஜினிகாந்த் கூறியதாகவும், அதனை எப்படி சரி செய்வது என்று கேட்டதாகவும் கூறி இருக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்த போது, அதனை முதல் ஆளாக எதிர்த்தவர் சீமான். தமிழ்நாட்டை தமிழரே ஆள வேண்டும் என்று முழங்கிய சீமான், ரஜினிகாந்தை கடுமையாக விமர்சித்து வந்தார். ஆனால் அரசியல் பாதையில் இருந்து ரஜினிகாந்த் பின்வாங்கிய பின், சீமான் ரஜினிகாந்த் உடன் நட்பில் இருக்கிறார். அவ்வப்போது மரியாதை நிமித்தமாக ரஜினிகாந்தை சீமான் சந்தித்து வருகிறார்.

இந்த சந்திப்பின் போது என்ன பேசப்பட்டது என்பது தொடர்பாக சீமான் கூறியதில்லை. இந்த நிலையில் கடந்த முறை ரஜினிகாந்த் உடனான சந்திப்பின் போது என்ன நடந்தது என்று சீமான் பேசியுள்ளார். அதில் சீமான், எப்போது படிக்கிறது என்று ரஜினிகாந்த் கேட்டார். ஏனென்றால் நான் ஒரு புத்தகத்தை அவருக்கு பரிசாக கொடுத்திருந்தேன்.
அதற்கு நான், இரவு 11 மணிக்கு தூங்கிவிட்டேன் என்றால், 2 மணிக்கு முழிப்பு வரும்.. அப்போது கொஞ்சம் படிப்பேன்.. 4 மணி வரை படித்துவிட்டு மீண்டும் தூங்கிவிடுவேன். அதன்பின் காலை 6.30 மணி போல் உடற்பயிற்சிக்கு சென்றுவிடுவேன். ஒருவேளை தூக்கமே வரவில்லை என்றால், காலை 4 மணிக்கு எழுந்து படித்துவிட்டு அப்படியே பயிற்சிக்கு சென்றுவிடுவேன் என்றேன்.
அதற்கு ரஜினிகாந்த் சரியான நேரம் என்று பாராட்டினார். நான் 10 பக்கம் படித்தாலே தூக்கம் வந்துவிடுகிறது என்று கூறினார். அதற்கு நான், நல்லதுதான் என்று கூறினேன். அதனால் மாணவர்கள் படிக்க வேண்டும். அப்போதுதான் அறிவை வளர்த்துக் கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார். சீமானின் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications