3 தங்கச்சிங்க.. மூணு பேருமே லவ் மேரேஜ்.. நாளெல்லாம் அழுத அண்ணன்.. அடுத்து நடந்த 2 கொடுமைகள்!
3 மகள்களும் லவ் மேரேஜ் செய்து கொண்டதால் தாயும் மகனும் தூக்கில் தொங்கிவிட்டனர்
திருச்சி: 3 தங்கச்சிகளும் லவ் மேரேஜ் செய்து கொண்டதால், நாளெல்லாம் அழுது கொண்டிருந்த அண்ணன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.. மகன் இறந்த துக்கம் தாங்காமல் அடுத்த நாளே இவரது அம்மாவும் தற்கொலை செய்து கொண்டார்.. முதல் நாள் மகன், அடுத்த நாள் தாய் என ஒரே குடும்பத்தில் 2 பேரும் தற்கொலை செய்த சம்பவம் திருச்சியை உலுக்கி வருகிறது.
திருச்சியை அடுத்த மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருவாசி கிராமத்தைச் சேர்ந்த தம்பதி பன்னீர்செல்வம் - நீலாவதி.. இவர்களுக்கு பால்ராஜ் 26, சின்னத்துரை 24, மகள்கள் மீரா 30, கல்பனா 23, மீனா 21, ஆகிய 2 மகன்கள் 3 மகள்கள் உண்டு.

விவசாய குடும்பம் இது.. பால்ராஜ் சென்னையில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார்.. அதேபோல, மீரா, கல்பனா 2 பேருக்கும் கல்யாணம் ஆகிவிட்டது.. 2 பேருமே லவ் மேரேஜ் செய்து கொண்டு தனியாக போய்விட்டனர்.
இந்த நிலையில் லாக்டவுன் வரவும், பால்ராஜ் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார்.. அப்போதுதான், இன்னொரு தங்கச்சி மீனா ஒரு இளைஞரை காதலித்து கொண்டிருப்பது தெரிந்தது.. இதனால் அதிர்ச்சியானார்.. அதனால் மீனாவை கூப்பிட்டு, "ஏற்கனவே 2 பேரும் இப்படித்தான் லவ் பண்ணி கல்யாணம் செய்துக்கிட்டாங்க.. அதுவே நம்ம குடும்பத்துக்கு கஷ்டம் தந்துட்டு இருக்கு.. இப்போ நீயும் லவ் பண்ணினால் என்ன அர்த்தம்? நான் வேற ஒரு மாப்பிள்ளையை பார்க்கிறேன்.. இந்த காதல் வேண்டாம்" என்று கேட்டு கொண்டுள்ளார்.
ஆனால் மீனா பிடிவாதமாக இருந்தார்.. காதலை கைவிட விருப்பம் இல்லை என்றும் பால்ராஜிடம் சொல்லிவிட்டார்.. ஆனால் தொடர்ந்து பால்ராஜ் அட்வைஸ் செய்து கொண்டே இருக்கவும், மீனா வீட்டை விட்டு ஓடிப்போய்விட்டார்.. அந்த இளைஞரையே கல்யாணமும் செய்து கொண்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பால்ராஜ், நேற்று முன்தினமெல்லாம் அழுது கொண்டே இருந்தார்.. ஒருகட்டத்தில் மனசு உடைந்து வாய்க்கால் கரையோரத்தில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சடலத்தை கண்டு இவர்களது அம்மா நீலாவதி கதறி கதறி அழுதார்.. பிறகு உடல் தகனம் செய்யப்பட்டது.. மகன் இறந்தபிறகு அன்றைய நாள் முழுவதும் நீலாவதி பிரம்மை பிடித்தவாறே உட்கார்ந்திருந்தார்.
3 மகள்களும் இப்படி காதலித்து கல்யாணம் செய்து கொண்டார்களே, மகனும் இப்படி தூக்கில் தொங்கிவிட்டானே என்று வேதனையில் இருந்தவர், துக்கம் தாங்காமல் விடிகாலை தன்னுடைய புடவையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்... வாத்தலை போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்நாள் மகன், அடுத்த நாள் தாய் என ஒரே குடும்பத்தில் 2 பேர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை தந்து வருகிறது.
-
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications