அந்த ரயில் தான்..டெல்டா மக்களுக்கு தெற்கு ரயில்வே கொடுத்த குட்நியூஸ்..28ம்தேதி முதல் ரெடியாக இருங்க!

Subscribe to Oneindia Tamil

திருச்சி : தெற்கு ரயில்வே பல்வேறுரயில்களை இணைத்து ஒரே ரயிலாக இயக்கி வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை, கரூா், சேலம் ஆகிய 3 ஜோடி ரயில்களையும் இணைத்து வருகிற 28- ஆம் தேதி முதல் மயிலாடுதுறை - சேலம் - மயிலாடுதுறை என ஒரு ஜோடி ரயில்களாக இயக்கப்பட உள்ளது.

இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது: பயணிகளின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, மயிலாடுதுறை - திருச்சி - மயிலாடுதுறை முன்பதிவற்ற சிறப்பு விரைவு ரயில்கள் (06413, 06414), திருச்சி - கரூா் - திருச்சி முன்பதிவற்ற டெமு சிறப்பு விரைவு ரயில்கள் (06881, 06882), கரூா் - சேலம் - கரூா் முன்பதிவற்ற டெமு சிறப்பு விரைவு ரயில்கள் ஆகிய 3 ஜோடி ரயில்களை இணைத்து ஆக. 28 ஆம் தேதி முதல் மயிலாடுதுறை - சேலம் - மயிலாடுதுறை முன்பதிவற்ற விரைவு ரயில்களாக (16811, 16812) இயக்கப்பட உள்ளது. 10 பொது மற்றும் 2 சரக்குப் பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளது.

Southern Railway major good news for Mayiladuthurai , karur and Salem for train connection

மயிலாடுதுறையிலிருந்து புறப்படும் இந்த ரயில்கள் குத்தாலம், நரசிங்கன்பேட்டை, ஆடுதுறை, திருவிடைமருதூா், திருநாகேஸ்வரம், கும்பகோணம், தாராசுரம், சுவாமிமலை, சுந்தரபெருமாள்கோவில், பாபநாசம், பண்டாரவடை, அய்யம்பேட்டை, பசுபதிகோவில், திட்டை, தஞ்சாவூா், ஆலக்குடி, பூதலூா், அயனாபுரம், சோளகம்பட்டி, தொண்டமான்பட்டி, திருவெறும்பூா், மஞ்சத்திடல், பொன்மலை, திருச்சி, பாலக்கரை, திருச்சி கோட்டை, முத்தரசநல்லூா், ஜீயபுரம், எலமனூா், பெருகமணி, பேட்டவாய்த்தலை, குளித்தலை, லாலபேட்டை, மகாதானபுரம், சித்தலவாய், மாயனூா், வீரராக்கியம், கரூா், வாங்கல், மோகனூா், நாமக்கல், கலங்காணி, ராசிபுரம், மல்லூா் வழியாக சேலம் சென்றடையும்.

இந்த ரயிலின் இயக்கம் காரணமாக, திருச்சி - மன்னாா்குடி சிறப்பு விரைவு ரயிலானது திருச்சியிலிருந்து மாலை 6.50 மணிக்குப் புறப்பட்டு, மன்னாா்குடிக்கு இரவு 9.20 க்கு சென்றடையும். இதே போல, காரைக்கால் - திருச்சி சிறப்பு ரயிலானது காரைக்காலிலிருந்து பிற்பகல் 2.45 மணிக்குப் புறப்பட்டு திருச்சிக்கு மாலை 6.45 மணிக்கு வந்தடையும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே மக்கள் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து ரயில் சேவை நீட்டிப்பு, புதிய ரயில்கள் இயக்குதல், குறிப்பிட்ட ஊரில் நிறுத்துதல் போன்ற அறிவிப்புகளையும் அண்மையில் வெளியிட்டுள்ளது. எந்தெந்த ஊர்கள் எல்லாம் இதனால் பயனடைய போகின்றன என்பதை இப்போது பார்ப்போம்.

வேளாங்கண்ணி - எர்ணாகுளம் ரயில்கள் வாரம் 2 முறை இரு மார்க்கத்திலும் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் செங்கோட்டை, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணியை சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி புதிய ரயில்: திருப்பதி - கொல்லம் இடையே வாரம் 2 முறை இரு மார்க்கத்திலும் இயக்கப்பட உள்ள புதிய விரைவு ரயில் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக கொல்லம் வரை இயக்கப்பட உள்ளது.

ரயில்கள் இணைப்பு : பாலக்காடு - திருநெல்வேலி வரை இயக்கப்படும் பாலருவி விரைவு ரயில் சேவையை தூத்துக்குடி வரை இனிமேல் இயக்கப்பட உள்ளது. இது தவிர மதுரை தற்போது தினசரி இயக்கப்பட்டு வரும் குருவாயூர் - புனலூர் - குருவாயூர் எக்ஸ்பிரஸ், மதுரை - செங்கோட்டை - மதுரை எக்ஸ்பிரஸ், செங்கோட்டை - கொல்லம் - செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு, மதுரை - குருவாயூர் - மதுரை எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் ஒரே ரயிலாக, மதுரைக்கும், குருவாயூருக்கும் இடையே இயக்கப்படுகிறது..

இந்தப் புதிய ரயில் மதுரையிலிருந்து வரும் 27-ம்தேதி அன்றும், குருவாயூரிலிருந்து 28-ம் தேதியன்றும் தனது சேவையை தொடங்க போகின்றன. இதன்படி, ரயில் எண். 16327 மதுரை - குருவாயூர் எக்ஸ்பிரஸ், மதுரையில் இருந்து 27-ம் தேதி பகல் 11.20 மணிக்கு புறப்படும். அடுத்த நாள் அதிகாலை 2.10 மணிக்கு அந்த ரயில் குருவாயூரை அடையும்.

மறுமார்க்கத்தில், ரயில் எண். 16328 குருவாயூர் - மதுரை எக்ஸ்பிரஸ், குருவாயூரிலிருந்து 28-ம் தேதி காலை 5.50-க்கு புறப்படும், அன்று இரவு 7.50-க்கு மதுரை சென்றடையும். இந்த ரயில், மதுரை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், தென்காசி, செங்கோட்டை, புனலூர், கொல்லம், கோட்டயம், திருச்சூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+