ஸ்ரீரங்கம் ரங்கநாதர் முன்பே அடிதடி.. ரத்தம் சிந்திய பக்தர்.. வைகுண்ட ஏகாதசி தொடக்க நாளில் இப்படியா
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முயன்ற காவலாளிகளுக்கும் பக்தர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மூலஸ்தானத்தில் நடந்த கைகலப்பில் ஐயப்ப பக்தரின் மூக்கு உடைந்து ரத்தம் சிந்தியதால் ஸ்ரீரங்கநாதர் கோவில் நடை மூடப்பட்டது.
பூலோக வைகுண்டம் என்று பக்தர்களால் போற்றப்படும் ஆலயம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். மகாவிஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் முதலாவது ஆலயம் ஸ்ரீரங்கநாதர் ஆலயம். சுக்கிரன் தலமாகவும் போற்றப்படும் இந்த கோவிலுக்கு தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.

வைகுண்ட ஏகாதசி விழா இன்றைய தினம் திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்க உள்ளது. 21 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முக்கிய அம்சமாக வரும் 23ஆம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் அமாவாசை தினமான இன்று ஏராளமானோர் ஸ்ரீரங்கத்தில் குவிந்துள்ளனர். கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் கோவில் காவலாளிகள் கூட்டத்தை கட்டுப்படுத்தினர். அப்போது வெளிமாநிலங்களில் இருந்து வந்திருந்த ஐயப்ப பக்தர்கள் முந்திக்கொண்டு செல்ல முயன்றதாக தெரிகிறது. இதனையடுத்து காவலாளிகளுக்கும் கர்நாடகாவில் இருந்து வந்த ஐயப்ப பக்தர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
முதலில் வாக்குவாதமாக தொடங்கிய சண்டை பின்னர் கைகலப்பாக மாறியது. ஒருவருக்கொருவர் மாறி மாறி தாக்கியதில் பக்தர் முகத்தில் காயம் ஏற்பட்டது. இதில் கோவில் வளாகத்திலேயே பக்தர் ரத்தம் சிந்தினார். இதனையடுத்து காவலாளி மீத நடவடிக்கை எடுக்க கோரி பக்தர்கள் கூச்சலிட்டனர். அங்கு வந்த உதவி ஆணையர் பக்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
கோவில் வளாகத்தில் பக்தர் ரத்தம் சொட்ட சொட்ட அமர்ந்திருந்தது பார்ப்பவர்களை பதைபதைப்பில் ஏற்படுத்தியது. கோவிலில் ரத்தம் சிந்தியதால் சில நிமிடங்கள் கோவில் நடை அடைக்கப்பட்டது. இதனையடுத்து காவலாளி மீது பக்தர்களும், பக்தர்கள் மீது காவலாளிகளும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து கோவில் வளாகத்தில் சிந்தப்பட்டிருந்த ரத்தம் துடைக்கப்பட்டு பரிகார பூஜைகளுக்குப் பிறகு கோவில் நடை திறக்கப்பட்டது. இன்றைய தினம் வைகுண்ட ஏகாதசி விழா ஸ்ரீரங்கநாதர் கோவிலில் திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்க உள்ளது. இந்த சூழ்நிலையில் பக்தர்கள், காவலாளி இடையே மோதல் ஏற்பட்டு ரத்தம் சிந்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் மன அமைதிக்காகத்தான் பக்தர்கள் சாமி கும்பிட வருகின்றனர். அங்கு நெரிசலின் போது பாதுகாப்பு பணியில் இருப்பவர்கள் பக்தர்களை திட்டி மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர் என்ற புகார் எழுந்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவில் போல இங்கும் சரியான வரிசையில் பக்தர்கள் அனுமதித்தால் இதுபோல நெரிசலில் சிக்கி தவிக்க வேண்டியிருக்காது என்றும் பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications