அள்ள அள்ள தங்கம், வெள்ளி, பணம்.. ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை இவ்வளவா?
திருச்சி: 108 வைணவ திருத்தலங்களில் முதல் திருத்தலமாக விளங்கும் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கம், வெள்ளி, பணம் உள்ளிட்டவற்றை உண்டியலில் காணிக்கையாகச் செலுத்துவது வழக்கம். அந்த வகையில், தற்போது கோவில் உண்டியல் காணிக்கை மூலமாக எவ்வளவு வருவாய் கிடைத்துள்ளது என பார்க்கலாம்.
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ளது புழ்பெற்ற அரங்கநாத சுவாமி. 108 வைணவத் திருத்தலங்களில் முதல் திருத்தலமாக இந்த கோவில் திகழ்கிறது. இந்தக் கோயில் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுகிறது. திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் 1600 ஆண்டுகளுக்கு மேலான பழைமையான கோயிலாகும். தென்னிந்தியாவில் உள்ள கோயில்களில் மிகப்பெரிய ராஜகோபுரம் கொண்ட கோயிலாகும்.

பக்தர்கள் தரிசனம்
சோழநாட்டின் காவிரி ஆற்றங்கரைில் அமைந்துள்ள முதல் திவ்யதேச திருத்தலம் இதுவாகும். ஐநா சபையின் யுனேஸ்கோ விருதைப் பெற்ற முதல் தமிழ் திருக்கோயில் ஸ்ரீரங்கம்தான். இக்கோயிலுக்கு உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருவது வழக்கம்.
உண்டியல் காணிக்கை
கோயிலுக்கு வரும் பக்தர்கள் சுவாமி தரிசன் செய்துவிட்டு, தங்கம், வெள்ளி, பணம் உள்ளிட்டவற்றை சுவாமிக்கு கோயில் உண்டியலில் காணிக்கையாகச் செலுத்துவது வழக்கம். இக்கோயிலின் உண்டியல்கள் மாதம் தோறும் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்படுவது வழக்கம். அந்த வகையில், அரங்கநாதசுவாமி கோயிலில் இந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது.
பணம், தங்கம், வெள்ளி
கோயில் நிர்வாகிகள், அறநிலையத் துறை அதிகாரிகள், கோவில் அலுவலர்கள் உள்பட பலர் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில், 91 லட்சத்து 13 ஆயிரத்து 242 ரூபாய் பணத்தை பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தியுள்ளனர். மேலும், 79 கிராம் தங்கம், 1 கிலோ 145 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் உள்ளிட்டவற்றை பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தியுள்ளதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications