சுஜித் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது... மண்ணுலகில் இருந்து விடைபெற்ற பாலகன்
Recommended Video
திருச்சி: ஆழ்துளை கிணற்றில் விழுந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுவன் சுஜித்தின் உடல் மணப்பாறை அருகே உள்ள ஆவாரம்பட்டி புதூர் கிராமத்தில் உள்ள கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மணப்பாறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு சிறுவனின் உடல் நேராக கல்லறைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு கிறிஸ்துவ மத வழக்கப்படி இறுதிச்சடங்குகள் மேற்கொள்ளப்பட்டு விண்ணுலக வாழ்க்கைகான பிரார்த்தனைகள் செய்யப்பட்டன.

நல்லடக்கம்
திருச்சி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் இருந்து 3 கி.மீ.தொலைவில் உள்ளே ஆவாரம்பட்டி புதூர் கிராமத்தில் உள்ள கல்லறையில் சிறுவன் சுஜித் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. வீட்டிற்கு கொண்டு செல்வதாக இருந்த திட்டம் பிரேத பரிசோதனைக்கு பின்னர் மாற்றப்பட்டது.

கல்லறை பிரார்த்தனை
சிறுவன் சுஜித் உடல் கிறிஸ்துவ மத சம்பிரதாயப்படி இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. பாத்திமா நகர் கல்லறையில் சுஜித் உடலை வைத்து பாதிரியார்கள் சிறப்பு பூசை(பிரார்த்தனை நடத்தினர்). அதில் நடுகாட்டுப்பட்டி சுற்றுவட்டார கிராமமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

வைக்கமுடியாது
சிறுவன் உடல் கடந்த 5 நாட்களாக மண்ணுக்குள் கிடந்ததால் அவனது உடல் சிதைந்து நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அதனை அஞ்சலிக்காக வைக்கமுடியாது என்பதால் துரிதமாக அடக்கம் செய்யப்பட்டது.

இறுதிச்சடங்கில் அமைச்சர்கள்
சிறுவன் சுஜித்தை நல்லடக்கம் செய்யும் வரை அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் உடனிருந்தனர். அவர்களும் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு சுஜித் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications