78 அடி ஆழம் இல்லை.. 87 அடி ஆழத்தில் குழந்தை சுஜித்.. அதி நவீன கேமரா கண்டுபிடிப்பு
Recommended Video
திருச்சி: 78 அடி ஆழத்தில் குழந்தை இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தற்போது 87 அடி ஆழத்தில் குழந்தை சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகில் நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த பிரிட்டோ- கலாமேரி தம்பதியின் 2 வயது மகன் சுஜித் வில்சன். இவர் நேற்று முன் தினம் அவரது வீட்டில் உள்ள தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கிருந்த ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தார். அவரை மீட்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் குழந்தை பள்ளத்தில் சிக்கி 36 மணி நேரத்துக்கு மேலாகிவிட்டது. இதனால் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.

ரிக் இயந்திரம்
3ஆவது நாளாக இன்று மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் காலை முதல் குழந்தை இருக்கும் துளைக்கு பக்கவாட்டில் ரிக் இயந்திரம் பள்ளம் தோண்டும் பணிகளை செய்து வருகிறது. எனினும் அதில் 40 அடியில் பாறை இருந்ததால் அப்பணியில் தொய்வு ஏற்பட்டது.

குழந்தை 87 அடி ஆழத்தில்
இந்த நிலையில் அதிநவீன கேமரா மூலம் குழந்தையின் இருப்பிடத்தை மீட்பு க் குழுவினர் கண்டறிந்தனர். அதில் குழந்தை 78 அடி ஆழத்தில் இருப்பதாக கருதப்பட்ட நிலையில் அக்குழந்தை 87 அடி ஆழத்தில் இருக்கிறது.

சுஜித்
இதனால் 90 அடி வரை சுரங்கம் தோண்ட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். குழந்தை சுஜித் மீட்கப்பட வேண்டும் என்பதற்காக அனைவரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் எஸ் சிவராஜு கூறுகையில் பாறைகள் இல்லாமல் இருந்திருந்தால் குழந்தை சுஜித்தை 4 மணி நேரத்தில் மீட்டிருக்கலாம்.

40 அடி
மீட்கும் பணிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். 40 அடி வரை பாறைகள் உள்ளன. 40 அடிக்கு பிறகு வேகமாக ரிக் இயந்திரம் குழி தோண்டும் பணி நடைபெறும். பக்கவாட்டு பகுதியில் 24 அடி வரை குழி தோண்டப்பட்டுள்ளது என்றார்.
-
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications