சர்க்கரை நோயாளிக்கு ஸ்வீட் நியூஸ்.. இனி நிறைய வாழைப்பழம் சாப்பிடலாம்.. எப்படி தெரியுமா? திருச்சி செம

Subscribe to Oneindia Tamil

திருச்சி: சர்க்கரை நோயாளிகளுக்கு குட்நியூஸ் ஒன்று விரைவில் வரப்போகிறது.. தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குனர் இந்த மகிழ்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறார்.. அது என்ன தெரியுமா?

சர்க்கரை நோயாளிகள் எப்போதுமே உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.. நீரிழிவு நோயாளிகள் என்ன சாப்பிடலாம் மற்றும் சாப்பிடக்கூடாது, அந்த உணவுகள், எந்த அளவுக்கு சர்க்கரை அளவில் மாற்றத்தை உடலில் உண்டாக்கும்? என்பதையெல்லாம் அறிந்து வைத்திருக்க வேண்டும்.

Sugar Patients

"கிளைசெமிக் லோட்" மற்றும் "கிளைசெமிக் இன்டெக்ஸ்" என்ற அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது... டைப் 2 நீரிழிவு நோயாளிகள், குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.

ரத்த சர்க்கரை: குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட உணவுகள் உடலால் மெதுவாக உறிஞ்சப்பட்டு ரத்த சர்க்கரையை விரைவாக அதிகரிக்காமல் மெதுவாக அதிகரிக்கின்றன. அந்தவகையில், வாழைப்பழத்தின் கிளைசெமிக் குறியீடு 42-62 க்கு இடையில் குறைவாக இருந்து நடுத்தர அளவில் உள்ளது. வாழைப்பழங்கள் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டிருப்பதால் பச்சையாக குறைந்த அளவு வேண்டுமானால் சாப்பிடலாம்.

ஆனால், பெரும்பாலும் வாழைப்பழம் அதிகமாக பழுத்த மற்றும் சற்று பழுப்பு நிறத்தில் இருக்கும்போது நீரிழிவு நோயாளிகள் அதை சாப்பிடக்கூடாது. இதன் கிளைசெமிக் இண்டெக்ஸ் மிக மிக அதிகம்.

வாழைப்பழங்கள்: இதுபோன்ற வாழைப்பழங்களில், ஸ்டார்ச் எளிய சர்க்கரைகளாக உடைக்கப்படுகின்றன.. அவை எளிதில் வளர்சிதைமாற்றமும் செய்யப்படுகின்றன. பழம் ரத்த சர்க்கரையின் விரைவான உயர்வை ஏற்படுத்தும் என்பதால்தான், நீரிழிவு நோயாளிகளுக்கு வாழைப்பழங்கள் எப்போதுமே ஆபத்தானது என்கிறார்கள்.

இப்படிப்பட்ட சூழலில், சர்க்கரை நோயாளிகள் சாப்பிடும் வகையில் குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட வாழை கண்டறியப்பட்டிருக்கிறதாம்.. இது விரைவில் நமக்கு அறிமுகமும் செய்யப்பட உள்ளது. இந்த குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட வாழை ரகங்களை விவசாயிகளுக்கு அடுத்தாண்டு அறிமுகம் செய்ய உள்ளதாக திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநர் ஆர்.செல்வராஜன் தெரிவித்தார்.
சாதனைகள்: இதுகுறித்து அவர் சொன்னதாவது: "வாழை விவசாயிகளுக்காக 31 வருடங்களில் பல்வேறு சாதனைகளை என்ஆர்சிபி நிகழ்த்தியுள்ளது. கடந்த வருடம் காவிரி காஞ்சன், காவிரி வாமன் என 2 ரகங்களை அறிமுகப்படுத்தியிருந்தோம்.. இப்போது இந்த 2 ரகங்களையும் மத்திய ரகங்களாக வெளியிட பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதுபோலவே, நுமரன், மனோரஞ்சிதம் ஆகிய 2 வாழை ரகங்களையும், டெல்லியில் உள்ள தாவர ரகங்கள் மற்றும் விவசாயிகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையத்தில் பதிவு செய்துள்ளோம்.. முன்பெல்லாம் திசு வளர்ப்பு முறையில் 70 ஆயிரம் கன்றுகள் வரை மட்டுமே உற்பத்தி செய்த நிலையில், இப்போது 2.40 லட்சம் கன்றுகளை உற்பத்தி செய்து வழங்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

ஆராய்ச்சி மையம்: தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பண்ணையாக வாழை ஆராய்ச்சி மையத்தை மாற்றியிருக்கிறோம்.. இந்த மையத்தின் மூலம் நாடு முழுவதும் 3.57 லட்சம் விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர்" என்றார்.

Sugar Patients

திருச்சியிலுள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தை பொறுத்தவரை, இந்தியா, வெளிநாடுகள் எனச் சர்வதேச அளவில் இருக்கும், பாரம்பர்ய வாழை ரகங்கள், புதுமையான வாழை ரகங்கள் குறித்த ஆராய்ச்சிகள் இங்குதான் நடைபெற்று வருகின்றன. சுமார் 300க்கும் மேற்பட்ட வாழை ரகங்கள் குறித்த ஆராய்ச்சிகள் இங்கு நடைபெற்று வருகின்றன.

குணாதிசயம்: ஒவ்வொரு ரகத்தின் இயற்கைத் தன்மை, குணாதிசயம், மருத்துவப் பயன்கள் என்று ஒவ்வொரு விதங்களிலும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு, அரிய வகை வாழை ரகங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக மருத்துவரீதியாக வாழைப்பழத்தின் சர்க்கரைத்தன்மை குறித்த ஆராய்ச்சியை வாழை ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் முன்னெடுத்திருப்பதும், கிளைசெமிக் இண்டெக்ஸ் இயல்பிலேயே குறைவாக இருக்கும் வாழை ரகத்தையும் அறிமுகப்படுத்த போவதும் நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாகவே இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+