சோனமுத்தா போச்சா.. திருச்சி கலெக்டரை அப்படி பேசி.. இது தான் வாயை கொடுத்து புண்ணாக்கி கொள்வது!
திருச்சி: திருச்சி மாவட்ட ஆட்சியர் குறித்து பொதுமக்களிடம் ஒருமையில் தரக்குறைவாக பேசிய கல்லக்குடி மின்வாரிய இளநிலை பொறியாளரை பணியிடை நீக்கம் செய்து மின்வாரிய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இது தான் வாயை கொடுத்து புண்ணாக்கி கொள்வது என்று சொல்வார்கள்.மின்வாரிய அதிகாரி ஒருவர் ஊர் மக்களிடம் கலெக்டர் குறித்து ஒருமையில் எகிறி எகிறி பேசியது தொடர்பான வீடியோ வெளியானதால் சிக்கலில் சிக்கி உள்ளார்.
பொதுவாக அரசு வேலையில் உள்ளோர் உணர்ச்சி வசப்படாமல், வேலையில் மட்டும் கவனமாக இருந்தால் சிக்கலில் சிக்குவது இல்லை. மாறாக உணர்ச்சிவசப்பட்டு அவர்கள் செய்யும் சிறு செயலும் அவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.

பொதுமக்கள் பலர் வீடியோக்களை எடுத்து இணையத்தில் வெளியிடுவதால், அவர்கள் தான் அடுத்த இரண்டு நாளைக்கு அந்த ஊரில் பேசு பொருளாகிவிடுகிறார்கள். அப்படித்தான் திருச்சி மாவட்டம் லால்குடியில் மின்வாரிய அதிகாரி ஒருவர் சிக்கி உள்ளார்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள கல்லக்குடி மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வருபவர் ஸ்ரீதர். இவரிடம் கல்லக்குடி சமத்துவபுரம் முத்து மாரியம்மன் கோயிலுக்கு மின் இணைப்பு கேட்டு அப்பகுதி மக்கள் விண்ணப்பித்துள்ளனர்.
அந்த விண்ணப்பம் தொடர்பாக, ஊர் மக்கள் கல்லக்குடியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றும் இளநிலைப் பொறியாளரான ஆர்.ஸ்ரீதரை அண்மையில் சந்தித்து கேட்டுள்ளனர்.
பெங்களூர் என்ன பெங்களூர்.. இதை மட்டும் பண்ணுனா போதும்.. திருச்சி வேற லெவலுக்கு மாறும்! மாறும் போகஸ்
அதற்கு உதவிப் பொறியாளர் ஸ்ரீதர், "கோயிலுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கு, கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியர் ஆகியோரிடம் ஆட்சேபணை இல்லை என்ற கடிதத்தை பெற்று வந்தால்தான், மின் இணைப்பு தர முடியும். வருவாய்த் துறை முழுவதும் மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.
அவரது (ஆட்சியரை ஒருமையில்) சட்டையைப் பிடித்து இழுத்து கடிதத்தை வாங்கி வாங்க. நானே இணைப்புக்கான கட்டணத்தை செலுத்தி மின் இணைப்பு தருகிறேன்" என்று ஆவேசமாக பேசி உள்ளாராம்.
இந்நிலையில், கிராம மக்களுக்கும், இளநிலை பொறியாளர் ஸ்ரீதருக்கும் இடையே நடந்த இந்த உரையாடல் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.
இது குறித்து மின்வாரிய உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு வந்தவுடன், உதவிப் பொறியாளர் ஆர்.ஸ்ரீதரை பணியிடை நீக்கம் செய்து மின்வாரிய கண்காணிப்புப் பொறியாளர் எஸ்.பிரகாசம் நேற்று உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications