மத்தியில் ஆட்சி மாற்றத்துக்கான அடித்தளத்தை தமிழகம் அமைக்கும்.. ஐயூஎம்எல் காதர் மொய்தீன்
திருச்சி: தேசிய அளவில் ஆட்சி மாற்றத்துக்கான அடித்தளத்தை தமிழகம் அமைக்கும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 39 லோக்சபா தொகுதிகளுக்கான தேர்தல் நேற்று நடந்தது. தமிழகத்தில் 69 சதவீதம் மட்டுமே வாக்குகள் பதிவாகியிருந்தன. நேற்று காலையில் மந்தமாகவே வாக்குப் பதிவு தொடங்கியது.

மாநிலம் முழுவதும் 68,321 வாக்குச் சாவடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. ஆரம்பத்தில் மாநிலத்தின் பல வாக்குச் சாவடிகள் வெறிச்சோடி காணப்பட்டன. வெயில் அதிகரித்ததால் சில இடங்களில் காலையிலேயே மக்கள் வாக்களிக்க வந்தனர்.
அது போல் பலர் பிற்பகல் 3 மணிக்கு மேல் வாக்களிக்க வந்தனர். சில இடங்களில் தாமதமாக வாக்குப் பதிவுகள் தொடங்கினாலும் எங்கும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பெரிதாக பழுது ஏற்படவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த தேர்தலில் அரசியல்வாதிகள், பிரபலங்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர். அந்த வகையில் திருச்சி காஜாமியான் மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் காதர் மொய்தீன் வாக்களித்தார்.
அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். ஜனநாயகத்தை பாதுகாக்க அரசியலமைப்பு சட்டத்தை உறுதிப்படுத்த மத சார்பின்மையைக் கடைப்பிடிக்கும் ஆட்சி அமையும்.
தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெல்லும். தேசிய அளவிலான ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளத்தை தமிழகம் அமைக்கும்.












Click it and Unblock the Notifications