வரலாற்றில் மிகப்பெரிய மைல்கல்.. கல்லணை ஊரில் இனி "ஆப்பிள்" உற்பத்தி.. திருச்சியில் பெரும் அதிசயம்
திருச்சி: முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவிற்கு சென்றுள்ள நிலையில் தமிழ்நாட்டில் பல்வேறு முதலீடுகள் குவிந்து வருகின்றன. தமிழ்நாட்டை நோக்கி முதலீடுகள் அதிக அளவில் வருகின்றன. அந்த வகையில் திருச்சியில் முக்கியமான ஒரு முதலீடு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு உதவும் வகையில் பின்வரும் முக்கிய முதலீடுகள் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இஎம்எஸ்ஸில் துறையில் உலகளாவிய அளவில் மிகப்பெரிய நிறுவனமான ஜபில் திருச்சிராப்பள்ளியில் ₹2000 கோடிகளில் முதலீடு செய்யும். இதன் மூலம் 5000 வேலை வாய்ப்புகள் உருவாகும் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்திக்கான புதிய கிளஸ்டர் அங்கே உருவாக்கப்படும்.

ராக்வெல் ஆட்டோமேஷன் காஞ்சிபுரத்தில் ₹666 கோடி முதலீட்டில் தனது உற்பத்தியை விரிவுபடுத்தி, 365 வேலைகளை உருவாக்க உள்ளது. . இளைஞர்களின் திறன், MSMEகள் மற்றும் ஸ்டார்ட்அப்களை மேம்படுத்துவதற்கு ஆட்டோடெஸ்க் உடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
கல்லணை ஊரில் ஆப்பிள்: அதன்படி ஆப்பிள் சப்ளையர் ஜபில் திருச்சியில் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி ஆலையை ரூ.2,000 கோடி செலவில் நிறுவ உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 5,000 வேலை வாய்ப்புகள் உள்ளதாக மாநில அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் சிகாகோவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஜபில் துணைத் தலைவர் (செயல்பாடுகள்) மாட் குரோலி மற்றும் பிற நிர்வாகிகள் தலைமையிலான தமிழக பிரதிநிதிகள் குழு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த நிறுவனம் சர்வதேச அளவில் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி துறையில் முக்கிய உற்பத்தி மற்றும் சேவை நிறுவனம் ஆகும். ஹெச்பி மற்றும் சிஸ்கோ போன்ற முக்கிய நிறுவனங்களின் உபகரணங்களை இந்த நிறுவனம் உற்பத்தி செய்யும். ஆப்பிள் போன் உற்பத்தியிலும், அதன் உபகரண உற்பத்தியிலும் முக்கிய பணிகளை செய்து வருகிறது.
ஐபோன் 16உற்பத்தி: சென்னையில் ஏற்கனவே ஐபோன் 16 உற்பத்தி தொடங்கி நடந்து வருகிறது. இந்த நிலையில்தான் சென்னையில் ஐபோன் உற்பத்தியாளர்கள் 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் iPhone 17 ஐ உருவாக்கத் தொடங்குவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. முதல் முறையாக புதிய ஐபோன் தயாரிப்பு சீனாவிற்கு வெளியே தொடங்கும் என்று ஆப்பிள் ஆய்வாளர் மிங் சி குவோ கூறியுள்ளார். சீனாவில் உற்பத்தி தொடங்கும் முன்பாக சென்னையில் இந்த முறை ஐபோன் உற்பத்தி செய்யப்பட உள்ளது.
இதன் மூலம் சர்வதேச ஐபோன் மார்க்கெட்டில் சீனாவை சென்னை முந்தி உள்ளது. சென்னையில் தற்போது சர்வதேச நிறுவனங்கள் முதலீடுகளை அதிகப்படுத்தி வருகிறது. அதிலும் சீனாவில் இருக்கும் நிறுவனங்கள் வேகமாக தமிழகத்தில் முதலீடுகளை பெருக்கி வருகிறது.
பெருகும் முதலீடு: சீனாவில் இருந்து வெளியேறும் அமெரிக்க நிறுவனங்கள் சென்னையில் தனது கிளையை தொடங்க ஆலோசனை செய்து வருகிறது.சென்னை தற்போது உலக அளவில் டெலிகாம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களால் குறி வைக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் தற்போது முதலீடுகளை அதிகப்படுத்தி உள்ள பாக்ஸ்கான் நிறுவனம், மொத்தமாக தமிழகத்தில் உற்பத்தியை செய்து வருகிறது. இந்த நிறுவனம்தான் ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரி பாகங்களை அனுப்பி வருகிறது. சீனாவில் பாதி, சென்னையில் பாதி என்று செய்யப்பட்டு வந்த உற்பத்தியை நிறுத்திவிட்டு மொத்தமாக சென்னையில் உற்பத்தியை செய்ய பாக்ஸ்கான் நிறுவனம் முதலீடு செய்து உற்பத்தி செய்து வருகிறது.
சென்னையில் இனி அனைத்து search ஐபோன் தயாரிப்பையும் மொத்தமாக செய்ய அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படிதான் சென்னையில் ஐபோன் உற்பத்தியாளர்கள் 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் iPhone 17 ஐ உருவாக்கத் தொடங்குவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications