காவிரி: தமிழகத்தின் சட்டப் போராட்டங்கள் தீர்வாகாதாம்.. ஶ்ரீரங்கத்தில் மத்திய அமைச்சர் குமாரசாமி
திருச்சி: காவிரி விவகாரத்தில் அரசியல் கலக்கக் கூடாது; சட்டப் போராட்டங்களும் தீர்வாகாது என்று மத்திய அமைச்சர் குமாரசாமி வலியுறுத்தியுள்ளார். மேலும் உதயநிதி ஸ்டாலின், துணை முதல்வராக நியமிக்கப்பட்டது தமிழ்நாட்டின் அரசியல் விவகாரம். அதில் நான் கருத்து கூற விரும்பவில்லை என்றும் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் ஹெச்.டி. குமாரசாமி, கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து தனி விமான மூலம் நேற்று திருச்சி வந்தார். அங்கிருந்து ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார்.
ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள மூலவர் சன்னதி, தாயார் சன்னதி உள்ளிட்ட சன்னதிகளில் அவர் சாமி தரிசனம் செய்தார். கோவிலுக்கு வந்த அமைச்சர் குமாரசாமிக்கு கோவில் அர்ச்சகர்கள் மரியாதை செய்தனர்.

தரிசனம் செய்த பின்பு மத்திய அமைச்சர் ஹெச்.டி. குமாரசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது :
ரெங்கநாதரின் அருளைப் பெறுவதற்காக நான் இங்கு வந்தேன். தொடர்ந்து இங்கிருந்து சேலம் செல்ல உள்ளேன். அங்கு சேலம் உருக்காலையை ஆய்வு செய்கிறேன். 1970களில் தொடங்கப்பட்ட சேலம் உருக்காலை மூலம் ஆரம்பத்தில் நல்ல லாபம் கிடைத்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அது நலிவடைந்துள்ளது. அதை மீண்டும் புத்துயிரூட்டி வேலைவாய்ப்பை பெருக்குவது அதனை வளர்ச்சி அடைய செய்வது உள்ளிட்டவை குறித்து ஆய்வு கூட்டம் நடத்த உள்ளோம்.
தமிழக அரசும் தமிழ்நாட்டைச் சேர்ந்த விவசாய சகோதர, சகோதரிகளும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், உரிய காலத்தில் மழை பெய்யும் பொழுது காவிரி விவகாரத்தில் எந்த பிரசனையும் ஏற்படாது. மழை பொழிவு குறைவாக இருக்கும் போது தான் பிரசனை ஏற்படுகிறது. நல்ல மழைப்பொழிவு இருக்க வருண பகவான் அருள் பாலிக்க வேண்டும். காவிரி விவகாரத்தில் சட்டப் போராட்டங்கள் உதவி செய்யாது. விட்டுக் கொடுத்துப் போவது தான் இதற்கு தீர்வாக இருக்க முடியும். இரு மாநில விவசாயிகளும் ஒருவரை ஒருவர் புரிந்துக் கொண்டு நடந்து கொள்ள வேண்டும்.
காவிரி விவகாரத்தில் அரசியல் கலக்கக் கூடாது. நல்ல மழைப்பொழிவு இருக்க நான் இறைவனை வேண்டிக்கொள்கிறேன். உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்பட்டது தமிழ்நாட்டின் அரசியல் விவகாரம். அதில் நான் கருத்து கூற விரும்பவில்லை இவ்வாறு மத்திய அமைச்சர் குமாரசாமி கூறினார்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications