மீண்டும் மலரப் போவதும் மோடி ஆட்சி தான்.. திருச்சி பாஜக கூட்டத்தில் தில்லாக பேசிய தமிழிசை
திருச்சி : இந்தியாவில் அடுத்து மலர இருப்பதும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி தான் என்று அக்கட்சியின் தமிழக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி பாஜக மகா சக்தி மற்றும் சக்தி கேந்திர அமைப்பின் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது:
நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்களில் மிகக்குறைந்த ஓட்டு வித்தியாசத்திலேயே பாஜக ஆட்சியை இழந்து உள்ளது. மத்திய பிரதேசத்தில் வெறும் 4 இலக்க ஓட்டு வித்தியாசத்தில்தான் ஆட்சியை இழந்துள்ளோம்.
ராஜஸ்தானில் பாஜக வாங்கியுள்ள ஓட்டு சதவீதம் 38.8 சதவீதம். காங்கிரஸ் பெற்ற ஓட்டுக்கள் 39.3 சதவீதம். நூற்றுக்கும் குறைவான ஓட்டு வித்தியாசத்தில் பாஜக பல இடங்களில் தோற்றுள்ளது. ஒரு இடத்தில் வெறும் 50 ஓட்டு வித்தியாசத்தில் தோற்றுள்ளோம்.
ஓட்டுசாவடிக்கு ஒரு ஓட்டு கூடுதலாக பெற்று இருந்தால் கூட அது சட்டசபை தொகுதி அளவில் வரும்போது சில நூறு வாக்குகள் கூடுதலாக கிடைத்து பல இடங்களில் வெற்றி பெற்று இருக்க முடியும். முடிவு வேறு மாதிரி வந்திருக்கும்.
எனவே மகாசக்தி மற்றும் சக்தி கேந்திர அமைப்புகளின் நிர்வாகிகள் ஒருவரையும் விட்டு விடாமல் அனைத்து வாக்காளர்களிடம் நமது செயல்பாடுகள் குறித்து விளக்கி அவர்களை நம் பக்கம் கவரவேண்டும்.
இந்தியாவில் அடுத்து மலர இருப்பதும் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி தான் என்பதை தொண்டர்கள் மனதில் வைத்து செயல்பட வேண்டும் என்று தமிழிசை பேசினார்.
-
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
டிரம்ப் உடைத்த சர்ப்ரைஸ்.. "மோடி என் நண்பன்".. விரைவில் இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்












Click it and Unblock the Notifications